👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அண்மையில் பல மால்வேர் ஆப்ஸ்களை தொடர்ந்து அந்நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த ஆப்ஸ்கள் பயனர்களின் தகவல்களை திருடுவதாகவும், அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரம் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திருடப்படும் தகவல்கள்
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் ஆப்ஸ்கள் தனி நபர் விபரங்களைப் பயனரின் அனுமதியின்றி திருடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட தகவல்களை விளம்பர ஏஜென்சிகளுக்கும், கிளவுட் சர்வீஸ் நிறுவங்கள், வணிகர்கள் மற்றும் தேடுபொறி வழங்குநர்களுடனும் பகிர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1325 ஆப்ஸ்கள் நீக்கம்
பயனர்களின் தகவலைத் திருடும் ஆப்ஸ்கள் என்ற பெயரில் கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோர் தளத்திலிருந்து சுமார் 1325 ஆப்ஸ்களை நீக்கம் செய்துள்ளது. இதில் சில ஆப்ஸ்கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது.
அனுமதி கொடுத்த பயனர்களின் தகவலும் திருட்டு
அதேபோல் ஒரு ஆப்-ஐ ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்தவுடன், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள கேலரி, காண்டாக்ட் போன்ற விபரங்களை அணுகுவதற்கு அனுமதி கேட்கும். அனுமதி கொடுத்த பயனர்களின் தகவல்களை திருடியதுமட்டுமின்றி, அனுமதி வழங்காத பயனர்களின் தகவல்களையும் சேர்த்துத் திருடியுள்ளது என்று அதிர்ச்சி தரும் தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.
சிக்கலில் சிக்கிக்கொள்ளாதீர்கள்
தகவல் திருட்டிலிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ள நம்பகமான ஆப்ஸ்களை மட்டும் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். தேவையற்ற ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து உங்களை நீங்களே சிக்கலில் விழும்படி செய்துகொள்ளாதீர்கள் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.