உஷார் மக்களே! இந்த ஆன்லைன் மோசடியில் மட்டும் சிக்கிக்கொள்ளாதீர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 03, 2019

Comments:0

உஷார் மக்களே! இந்த ஆன்லைன் மோசடியில் மட்டும் சிக்கிக்கொள்ளாதீர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன் உலகத்தில் நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிறோம், ஆன்லைன் இல் எந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்ய நினைத்தாலும் உங்களின் ஈமெயில் ஐடி மிகவும் முக்கியம். ஈமெயில் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. Beware Of These Online Scams Which Will Cheat You For Sure. ஆன்லைன் உலகத்தில் நாம் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருக்கிறோம், ஆன்லைன் இல் எந்த ஒரு காரியத்தை நீங்கள் செய்ய நினைத்தாலும் உங்களின் ஈமெயில் ஐடி மிகவும் முக்கியம். ஈமெயில் பயன்படுத்தாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இமெயில் வழியாக உங்களை ஸ்கேம் செய்து உங்கள் தகவல்களை எந்தெந்த விதத்தில் திருடுகிறார்கள் என்று தெரியுமா? சூட்சம வலைகளில் சிக்கும் மக்கள் என்ன மாதிரியான சூட்சம வலைகளில் உங்களை, உங்களுக்கே தெரியாமல் சிக்க வைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள். எத தனை வகையான ஸ்கேம்கள் உள்ளதென்று பார்க்கலாம். இன்றைய டெக்னாலஜி உலகில் இந்த நிலையில் ஸ்கேம் என்று சொல்லக்கூடிய மோசடி ஈமெயில் குறித்து அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த ஸ்கேம் ஈமெயில் நமக்குப் பல தொல்லைகள் தரும் என்பதால் இப்படிப்பட்ட மின்னஞ்சல்களின் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
சர்வே ஈமெயில் ஸ்கேம் இந்த சர்வே கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள் உங்களுக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஒரு பொய்யான ஈமெயில் உங்கள் இன்பாக்சில் இருந்தால் யோசிக்காமல் உடனே அதை டெலீட் செய்யுங்கள். இந்த சர்வே லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்த உடனே அது மால்வேர் இணையதளத்திற்கு அழைத்து செல்லும், அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்துவிடும் அபாயம் ஏற்படக்கூடும். ஆகையால் சர்வே ஈமெயில்களை ஓப்பன் செய்ய வேண்டாம். ஃபிஷ்ஷிங் ஈமெயில் ஃபிஷ்ஷிங் ஈமெயில்கள் எப்பொழுதும் சட்டபூர்வமனதாகவும், அதிகாரப்பூர்வமான ஈமெயில் போலவே தோற்றமளிக்கும். ஆனால் உன்மையில் இவை உங்கள் பயனர்பெயர் மற்றும் பாஸ்வேர்டுகளை திருடி உங்களை மோசடி வாளிக்குள் சிக்க வைக்கும் என்பதால் இவ்வகை ஈமெயில்களில் இருந்து ஜாக்கிரதையாக இருங்கள். லாட்டரி ஸ்கேம் லாட்டரியில் நம்ப முடியாத அளவிற்குப் பணம் பரிசாகக் கிடைத்துள்ளது என்று ஸ்கேம் செய்யும் ஈமெயில் இருந்து தான் நீங்கள் முதலில் சிக்காமல் இருக்க வேண்டும். அதிகளவில் மக்கள் இந்த வகையான ஸ்கேம்களில் தான் சிக்கிக்கொள்கிறார்கள். எந்தவித லாட்டரி போட்டியிலும் நாம் கலந்து கொள்ளாமல் பரிசு கிடைக்காது என்பதைச் சற்று யோசியுங்கள். பரிசுத் தொகையைப் பெற சில வழிகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறி உங்களை வலையில் சிக்கவைத்துவிடுவார்கள் ஜாக்கிரதை.
நைஜீரியா ஈமெயில் ஸ்பேம் நைஜீரியாவில் இருந்து இந்த வகை இமெயில்கள் பெருமளவில் வருவதால், நைஜீரியா ஸ்பேம் மெயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. உங்களின் நண்பர்கள் போல் போலி ஐடிகளில் இருந்து, பெரிய தொகையை உங்களின் வங்கி கணக்கிற்கு மாற்ற உள்ளதாகவும், அதற்கான செலவுத்தொகையாக மட்டும் செலுத்தினால் மட்டும் போதும் என்று ஆசையாக பேசி உங்களை ஏமாற்றிவிடுவார்கள். URL ஈமெயில் ஸ்கேம் இவ்வகை ஈமெயில்கள் பெரும்பாலும் டுவிட்டரின் URL போல் இருக்கும். இந்த வகை ஈமெயில்களை க்ளிக் செய்வதற்கு முன்னர் அதன் புரொஃபலை பார்த்து, அது உண்மையான அக்கவுண்ட் தானா என்று உறுதி செய்துகொள்ளுங்கள். URLல் உள்ளே மறைந்திருக்கும் மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரை ஹேக் செய்ய வைத்துவிடும். குவிஸ் ஈமெயில் ஸ்கேம் உங்களுக்கு கேள்வி கேட்டு பதிலளிக்குமாறும் வரும் ஈமெயில், அதற்கு உங்களுக்கு ஒரு பரிசுத்தொகை கிடைக்கும் என்றும், ஆனால் இதில் கலந்து கொள்வதற்கு ஒரு தொகை வேண்டும் என்றும் கேட்கும். நீங்கள் தொகையை அனுப்பினால் அதோடு அவ்வளவுதான். எனவே இவ்வகை ஈமெயில்களை தவிர்த்துவிடுவது நல்லது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews