👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவர்களுக்கு, 'வைட்டமின் - டி' சத்து குறைவு ஏற்பட்டுள்ளதால், மைதானத்தில் அதிக நேரம் விளையாட அனுமதிக்குமாறு, பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, உடலில் வைட்டமின் - டி சத்து குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. சூரிய ஒளி உடலில் படும்போது, வைட்டமின் - டி சத்து கிடைக்கிறது.மாணவர்கள் பெரும்பாலும், வகுப்பறை மற்றும் வீடுகளுக்குள், கம்ப்யூட்டர் விளையாட்டுகளில் நேரத்தை செலவிடுகின்றனர். இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மாணவர்களுக்கு, வைட்டமின் - டி சத்து குறைவு ஏற்பட்டுள்ளதால், அதை அதிகப்படுத்துவது குறித்து, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து வகை பள்ளிகளும், மாணவர்களுக்கு சூரிய ஒளியால், வைட்டமின் - டி சத்து கிடைக்கும் வகையில், மைதானங்களில் விளையாடும் நேரத்தை அதிகமாக்க வேண்டும்.உடற்கல்வியியல் வகுப்புகளை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
DSE - Approval for Promotion of Sun Exposure Program in all types of schools - Regarding.
வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். ஒய்வு நேரங்கள், இடைவேளைகளில் திறந்த மைதானங்களில் மாணவர்களை சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U