உயர் கல்வி சேர்க்கையில் பின்தங்கியது குறித்து ஆலோசிக்கப்படும்: உயர் கல்வித் துறை செயலர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2019

Comments:0

உயர் கல்வி சேர்க்கையில் பின்தங்கியது குறித்து ஆலோசிக்கப்படும்: உயர் கல்வித் துறை செயலர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர் கல்வி சேர்க்கையில் தமிழகம் பின்தங்கியது குறித்து கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆலோசிக்கப்படும் என உயர் கல்வித் துறைச் செயலர் மங்கத் ராம் சர்மா கூறினார். 2018-19 ஆண்டுக்கான அகில இந்திய உயர் கல்வி ஆய்வறிக்கை முடிவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இப்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ஒட்டுமொத்த உயர் கல்வி மாணவர் சேர்க்கையில் இதுவரை முதலிடம் வகித்து வந்த தமிழகம், பின்னடைவைச் சந்தித்துள்ளது. தமிழகம் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற உயர் கல்வித் துறைச் செயலர் மங்கத்ராம் சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் உயர் கல்வி மாணவர் சேர்க்கை சற்று குறைந்திருக்கிறது. அதே நேரம், இந்த ஆய்வுக்கு தமிழக நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் முழுமையான சேர்க்கை விவரங்களை அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இருந்தபோதும், இதுகுறித்து கல்வி நிறுவன நிர்வாகிகள், கல்வியாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.
ஒட்டுமொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் (ஜி.இ.ஆர்) இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த தமிழகம், இப்போது மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை உத்தரப் பிரதேச மாநிலமும், மகாராஷ்டிரம் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன. அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையை (ஆயிஷா) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-19 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை இப்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையில் 962 பல்கலைக்கழகங்கள், 38,179 கல்லூரிகள், 9,190 ஒற்றைப் படிப்பை வழங்கும் கல்லூரிகள் (ஸ்டேன்ட் அலோன்) பங்கெடுத்துள்ளன. சேர்க்கை சரிவு: அந்த ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை சரிவைச் சந்தித்துள்ளது தெரியவருகிறது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், கடந்த ஆண்டு தமிழகம் 46.9 சதவீதத்துடன் முதலிடத்தில் இருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
முதலிடத்தை உத்தரப் பிரதேச மாநிலம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் உயர்கல்வியில் மாணவர்கள் 49.30 சதவீத அளவிலும், மாணவிகள் 50 சதவீத அளவிலும் சேர்க்கை பெற்றுள்ளனர். அடுத்ததாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மாணவர்கள் 54.45 சதவீத அளவிலும், மாணவிகள் 45.05 சதவீத அளவிலும் சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழகத்தில் உயர்கல்வியில் சேர்ந்துள்ளவர்களில் 50.87 சதவீதத்தினர் மாணவர்கள். 49.13 சதவீதத்தினர் மாணவிகள். அதாவது 17 லட்சத்து 36 ஆயிரத்து 870 மாணவர்களும், 16 லட்சத்து 77 ஆயிரத்து 326 மாணவிகளும் உயர்கல்வியில் சேர்த்துள்ளனர். இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் நான்காமிடத்தையும், ராஜஸ்தான் ஐந்தாமிடத்தையும், கர்நாடகம் ஆறாவது இடத்திலும் உள்ளன. மாணவிகள் சேர்க்கையில் சண்டிகர் முதலிடம்: உயர்கல்வியில் மாணவிகள் சேர்க்கையில் 63.9 சதவீதத்துடன் சண்டிகர் முதலிடம் வகிக்கிறது. இந்தப் பட்டியலில் சிக்கிம், புதுச்சேரி, தில்லி, தமிழகம், ஹிமாசலப் பிரதேசம், கேரளம், உத்தரகண்ட், தெலங்கானா, கோவா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் கர்நாடகம் முதலிடம்: உயர்கல்வியில் வெளிநாட்டு மாணவர்களை அதிகம் ஈர்க்கும் மாநிலமாக கர்நாடகம் விளங்குகிறது. இங்கு 10,023 வெளிநாட்டு மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்தப் பட்டியலில் 5,003 வெளிநாட்டு மாணவர்களுடன் மகராஷ்டிரம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பஞ்சாப் (4,533), உத்தரப் பிரதேசம் (4,514), தமிழகம் (4,101), ஹரியாணா (2,872), தில்லி (2,141), குஜராத் (2,068), தெலங்கானா (2,020) ஆகியவை இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பி.இ. படிப்புகளில் சேர்க்கை சரிவு: இந்த ஆய்வறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் பி.இ. படிப்புகளிலும், பி.ஏ. பட்டப் படிப்புகளிலும், முதுநிலை பட்டப் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதாவது, பி.இ., பி.டெக். படிப்புகளில் 2014-15 ஆம் ஆண்டில் 42,54,919 என்ற அளவில் இருந்த மாணவர் சேர்க்கை 2018-19 ஆம் ஆண்டில் 37,70,949 ஆகக் குறைந்துள்ளது. அதுபோல, பி.ஏ. இளநிலை கலைப் படிப்புகளில் 2014-15 ஆம் ஆண்டில் 98,60,520 ஆக இருந்த சேர்க்கை, 2018-19 ஆம் ஆண்டில் 91,98,205 ஆகக் குறைந்திருக்கிறது. அதே நேரம், பி.எஸ்சி., பி.காம். படிப்புகளில் சேர்க்கை அதிகரித்திருக்கிறது. பி.எஸ்சி. படிப்புகளில் 2014-15 ஆம் ஆண்டு 42,99,538 ஆக இருந்த சேர்க்கை, 2018-19 ஆம் ஆண்டு 50,43,732 ஆக அதிகரித்திருக்கிறது. பி.காம். படிப்புகளில் 2014-15 ஆம் ஆண்டில் 33,38,111 ஆக இருந்த சேர்க்கை, 2018-19 ஆம் ஆண்டு 35,71,436 ஆக உயர்ந்திருக்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews