Search This Blog
Wednesday, September 25, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கூட்டுறவுத்துறை அலுவலக பணியிடங்களுக்கான தேர்வில் அண்ணாமலை பல்கலை பட்டய சான்று நிராகரிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.கூட்டுறவுத்துறையின் வங்கி, சங்கங்களில் 2500 அலுவலக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பட்டப்படிப்புடன், கூட்டுறவு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் பதிவில் அண்ணாமலை பல்கலை கூட்டுறவு முதுகலை பட்டய (பி.ஜி.டி.சி.எம்.,) சான்று ஏற்க மறுக்கப்பட்டு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர் சங்க மாநில பொது செயலர் வெங்கடாசலபதி கூறியதாவது:இப்பணியிடங்களுக்கு தொலைநிலை கல்வியில் படித்தவர் விண்ணப்பிக்க கூடாது என சர்ச்சை கிளம்பியது. அது சரிசெய்யப்பட்டது.
விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கும்போது தற்போது அண்ணாமலை பல்கலை பி.ஜி.டி.சி.எம்., சான்றை ஏற்க மறுக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டுறவு சங்க பணியாளர் பணிவரன்முறைக்கு இப்பல்கலை பட்டய சான்றிதழை அங்கீகரித்து மாநில பதிவாளர் உத்தரவிட்டார்.அதுபோல் தற்போதைய பணிநியமனத்திலும் அப்பல்கலை சான்றிதழ்களை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
25 ஆண்டுகள் காத்திருப்புஇப்பணியிடங்களுக்கு பிளஸ் 2 மற்றும் கூட்டுறவுபட்டய படிப்பு என கல்வித் தகுதி இருந்தது. தற்போது பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்பு முடித்து ஏராளமானோர் 25 ஆண்டுகள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் 2500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பிளஸ் 2 முடித்து பட்டயப் படிப்பு படித்தோருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கூட்டுறவு பணிக்கு சான்று நிராகரிப்பு தவிக்கும் தேர்வர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.