வீடுவீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் இன்று தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 01, 2019

வீடுவீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டம் இன்று தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணி இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் தேர்தலின்போது, வாக்களிக்க செல்லும்போது சிலரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்றும், சிலரது பெயர்கள் வேறு வாக்குப்பதிவு மையத்துக்கு மாறிவிட்டது எனவும் தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதை சரிசெய்ய, தமிழகத்தில் இன்று (1ம் தேதி) முதல் வருகிற 30ம் தேதி வரை நாடு முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரி செய்யும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். அதேநேரம் வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்களை சரி செய்ய புதிய மொபைல் ஆப் ஒன்றை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆப் இன்று முதல் வருகிற 30ம் தேதி வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கையாக, வாக்காளர் சரிபார்ப்பு திட்டம்’ இன்று முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நாடு முழுவதும் நடக்கிறது. இந்த 30 நாட்களும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடு வீடாக வந்து வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பார்கள். அப்போது, வாக்காளர்கள் தங்களிடம் உள்ள புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் பதிவாகி இருக்கும் பிறந்த தேதி, பெயர், உறவு முறை, புகைப்படம், பாலினம் ஆகியவை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளலாம். அதேபோன்று, குடும்பத்தில் யாராவது பெயர் விடுபட்டு இருந்தால், குடிபெயர்ந்த வாக்காளர், இறந்த வாக்காளர், வாக்குச்சாவடி குறித்த தகவல் ஆகியவையும் சேகரிக்கப்பட்டு திருத்தம் செய்யப்படும்.
வாக்காளர் பட்டியலில் தவறான தகவல் இருந்தால், அதாவது பெயரில் எழுத்து பிழை, வயதில் தவறு, பாலினத்தில் தவறு இருந்தால் வாக்காளர்களே நேரடியாக Voters Helpline என்ற மொபைல் ஆப் மூலம் திருத்தங்கள் செய்யலாம். இப்படி மொபைல் ஆப் மூலம் திருத்தம் செய்தவர்களின் விண்ணப்பத்தை தேர்தல் அலுவலர்கள் தங்கள் வீடுகளுக்கே வந்து சரிபார்க்கும் பணியை மேற்கொள்வார்கள். அப்படி திருத்தம் செய்ய வரும்போது, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு ஒரிஜினல் ஆவணங்களை அவர்களிடம் காட்ட வேண்டும். பின்னர் வாக்காளர் கூறிய தவறுகள் திருத்திக் கொள்ளப்படும். வழக்கமாக வாக்குச்சாவடி முகவர்கள்தான் திருத்தம் செய்ய முடியும். தற்போது வாக்காளர்களே திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் வழி ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தமிழகத்தில் 8,095 பொது மையங்களிலும், 1,662 இ-சேவை மையங்களிலும், 97 வாக்காளர் சேவை மையங்களிலும் திருத்தங்கள் செய்யலாம். அங்கு 1 ரூபாய் 18 பைசா வசூலிக்கப்படும். இந்த பணிகள் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும். இதைதொடர்ந்து அக்டோபர் 15ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews