இலவச பஸ்பாஸ், சலுகை பயணச்சீட்டு பெறுவதற்கு ஆன்லைன் பரிவர்த்தனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 01, 2019

இலவச பஸ்பாஸ், சலுகை பயணச்சீட்டு பெறுவதற்கு ஆன்லைன் பரிவர்த்தனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
‘இலவச பஸ்பாஸ் மற்றும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே பெறும்படி செய்ய வேண்டும்’ என, எஸ்விஎஸ்-ஏஏபி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநில தலைவர் சுவாமி, செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் தமிழக அரசு போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: இரட்டை ஊதிய பாகுபாட்டை நீக்கி, ஒரே ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த 13வது பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிலாளர்களுக்கு வழக்க வேண்டிய அரியர்ஸ் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
தொழிலாளர்களின் மாத ஊதியத்தின் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதி, ஈட்டிய விடுப்பு, கூட்டுறவு சங்க நிதி, ஆயுள் காப்பீடு, அஞ்சல் காப்பீடு போன்ற பணத்தை பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக செலவிடப்பட்ட தொழிலாளர்களின் பணம் சுமார் ரூ.9,500 கோடியை ஒரே தவணையில் வழங்க வேண்டும். அரசு போக்குவரத்துக்கழகம் என்பது மக்களுக்கான ஒரு பொதுச்சேவை நிறுவனம், இலாப நோக்கம் அற்றது. ஆகவே போக்குவரத்துக்கழகத்தில் ஏற்படக்கூடிய வருமானத்திற்கும், செலவுக்கும் உண்டான வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் தனி தொகை ஒதுக்கீடு செய்து, இழப்பீட்டை அந்த வருடமே சரிசெய்ய வேண்டும்.
அலுவலக மற்றும் நிர்வாக ஊழியர்களின் எண்ணிக்கையை தணிக்கை செய்து கணிசமாக குறைக்க வேண்டும். அனைத்து வழித்தடங்களிலும் தானியங்கி பயணச்சீட்டு கருவி பயன்பாடு, கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும். அச்சடித்த சீட்டுமுறை முற்றிலுமாக கைவிடப்படவேண்டும். பேருந்துகளுக்கு டோல்கேட் வரிவிலக்கு மற்றும் டீசல் மானியம் மத்திய அரசிடம் பெறவேண்டும். நகர ஈட்டுப்படி அனைத்து மாநகராட்சிகளுக்கும் ஒரேமாதிரியான மதிப்பீடு செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் ஓட்டுனர், நடத்துனர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் பயோ-மெட்ரிக் வருகை பதிவேடு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இலவச பஸ்பாஸ் மற்றும் மாதாந்திர சலுகை பயணச்சீட்டை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக மட்டுமே பெறும்படி செய்ய வேண்டும். அம்மா குடிநீர் விநியோகத்தில் மாற்று திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோரை நியமிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews