150 வண்ணங்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 24, 2019

Comments:0

150 வண்ணங்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ்வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது. வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியலில் இதோ. 1. அடர் சிவப்பு - Cramoisy 2. அடர் நீலம் - Perse / Smalt 3. அடர் மஞ்சள் - Gamboge 4. அயிரை/ அசரை - Sandy colour 5. அரத்த(ம்) (நிறம்) - Heliotrope / Haematic 6. அருணம் - Bright red, colour of the dawn 7. அவுரி(நிறம்) - Indigo 8. அழல் நிறம் - Reddish colour of fire 9. ஆழ் சிவப்பு - Cinnabar 10. ஆழ் செந்நீலம் (ஊதா) - Claret
11. ஆழ் பழுப்பு - Brunneous 12. ஆழ் பைம்மஞ்சள் - Citrine 13. ஆழ்சிவப்பு - Cramoisy 14. ஆழ்நீலச் சிவப்பு - Aubergine 15. இடலை (ஆலிவ்வு) (நிறம்) - Olivaceous 16. இருள் சிவப்பு - Puccoon 17. இருள்சாம்பல் - Slate 18. இள மஞ்சள் - Flavescent / Primrose 19. ஈய(ம்) (நிறம்) - Plumbeous 20. ஈரல்நிறம் - Dark red colour, purple colour 21. உறைபால்(நிறம்) - Whey 22. எண்ணெய்க்கறுப்பு - Dark black colour 23. எலுமிச்சைம் - Citreous 24. ஒண்சிவப்பு - Cardinal 25. ஒளிர் செஞ்சிவப்பு - Phoeniceous 26. ஒளிர் செம்மை - Coccineous 27. ஒளிர் வெண்கலம் - Aeneous 28. ஒளிர் வெண்கலம் (நிறம்) - Aeneous 29. ஒளிர்சிவப்பு - Puniceous 30. ஒளிர்மஞ்சள் - Sulphureous / Vitellary 31. கசகசாச் சிவப்பு - Ponceau 32. கடல்நீல (நிறம்) - Ultramarine 33. கடற்பச்சை - Cerulean 34. கத்தரிநீலம் - Periwinkle (நித்திய கல்யாணி) 35. கபிலை / புகர்நிறம் - Tawny, brown or swarthy colour 36. கரு (நிறம்) - Sable 37. கருஞ்சிவப்பு - Porphyrous / Purpureal 38. கரும்பச்சை - Corbeau 39. கருமை - Nigricant / Nigrine 40. காயாம்பூ (நிறம்) - Purple colour
41. காளிமம் - Black colour 42. கிளிச்சிறை - Gold resembling the parrot's wing in colour 43. குங்குமச் சிவப்பு - Vermeil 44. குங்குமப்பூ(நிறம்) - Croceate / Saffron 45. குரால் - Dim, tawny colour 46. குருதிச்சிவப்பு - Erythraean / Sanguineous / Incarnadine 47. குருதிச்செம்மை - Vermilion 48. கோமேதக(நிறம்) -Topaz 49. சருகிலை (நிறம்) - Filemot 50. சாம்பல் - Cinerious 51. சாம்பல் பச்சை - Caesious / Sage 52. சாம்பல் மஞ்சள - Isabelline 53. சுடர் (நிறம்) - Flammeous 54. சுடுமண் (நிறம்) - Terracotta 55. சுதை வெண்மை - Cretaceous 56. செக்கர் - Reddish sky 57. செங் கருநீல (நிறம்) - Violet / Violaceous 58. செங்கருப்பு - Piceous 59. செங்கல்மங்கல் - Dim red colour 60. செங்கற்சிவப்பு - Lateritious / Testaceous 61. செந்தீவண்ணம் - Colour of glowing fire 62. செந்தூரச்சிவப்பு - Minium 63. செப்புநிறம் - Dark red colour 64. செம்பட்டை - Brown colour of hair 65. செம்பவளம் (மிகு சிவப்பு) - Deep red colour, Crimson colour 66. செம்பழுப்பு - Sinopia / Sorrel 67. செம்பு - Copper colour 68. செம்பூச்சி - Kermes 69. செம்பொன் - Titian 70. செம்மஞ்சள் - Jacinthe
71. செவ்வல் (செந்நிறம்) - Redness 72. சோணம் - Red colour, crimson colour 73. தசை (நிறம்) - Sarcoline 74. தவிட்டுநிறம் - Brown, dun colour 75. திமிரம் - Colour of Darkness 76. தும்பை நிறம் - Pure white colour 77. துமிரம் - Deep red colour 78. துரு (நிறம்) - Ferruginous 79. துருச் சிவப்பு - Rubiginous 80. துவர் (சிவப்பு) - Scarlet Red colour 81. துவரி (காவிநிறம்) - Salmon colour 82. தூயபழுப்பு - Sepia 83. தெள்ளுப்பூச்சி (நிறம்) - Puce 84. நட்டுச்சினைமண் - A kind of earth of the colour of crab's spawn 85. நல்சிவப்பு - Coquelicot 86. நறுமஞ்சள் - Lutescent 87. நன்மஞ்சள் - Luteolous 88. நன்னிறம் - White colour 89. நீல (நிறம்) - Azuline 90. நீல மணி - Sapphire 91. நீலச்சாம்பல் - Glaucous / Cesious / Gridelin / Lovat 92. நீலச்சிவப்பு - Amaranthine / Solferino 93. நீலப்பச்சை - Turquoise / Viridian 94. பச்சை - Chlorochrous 95. பசுமை - Virid 96. பழுக்காய் - Yellowish, orange or gold with red colour, as of ripe areca-nut 97. பழுப்பு மஞ்சள் - Fulvous 98. பழுப்புச் சிவப்பு - Castaneous / Rufous / Russet / Umber 99. பழுப்புச்சாம்பல் - Greige / Taupe 100. பளீர்சிவப்பு - Stammel
101. பனிவெண்மை - Niveous 102. பாணிச்சாய் (கள்போன்ற முத்துநிறம்) - Colour of a class of pearls, resembling that of toddy 103. பால்வண்ணம் White colour 104. புகர் நிறம் - Tawny / Tan 105. புகைக்கரி - Fuliginous 106. புள்ளிச் சாம்பல் - Liard grey 107. புற்பச்சை - Prasinous 108. புறவு (நிற) - Columbine 109. பூஞ்சல் (மங்கனிறம்) - Brownish colour 110. பூஞ்சாயம் (அழுத்தமான சிவப்பு) - Deep, ruddy colour 111. பூவல் - Red colour 112. பைந்நீல(நிறம்) - Teal 113. பைம்பொன் - Chrysochlorous 114. பொன் மஞ்சள் - Goldenrod 115. பொன்மஞ்சள் - Luteous 116. பொன்மை - Aurulent 117. மகரம் - Pink colour 118. மங்கல் பழுப்பு - Fuscous 119. மங்கல் பழுப்பு - Khaki 120. மங்கல்பச்சை - Eau-de-nil 121. மஞ்சள் - Xanthic / Icterine / Icteritious 122. மஞ்சள் பச்சை - Chartreuse / Zinnober 123. மஞ்சள் பழுப்பு - Lurid / Ochre 124. மஞ்சள்சிவப்பு - Wallflower 125. மணிச்சிவப்பு - Rubious 126. மணிநிறம் - Dark blue colour, as of sapphire 127. மயில்நீலம் - Pavonated 128. மரகதப்பச்சை - Smaragdine 129. மருப்பு (தந்தம்) - Eburnean 130. மல்லிகை மஞ்சள் - Jessamy
131. மாமை - Dark-brown colour 132. முக்கூட்டரத்தம் - Red colour produced by chewing betel, arecanut and lime 133. முத்துச்சாம்பல் - Griseous 134. வளர்பச்சை - Virescent 135. வாதுமை (நிறம்) - Ibis 136. வான் நீலம் - Cyaneous 137. விண் நீலம் - Celeste 138. விழி வெண்மை - Albugineous 139. வெங்காயப் பச்சை - Porraceous 140. வெண்சாம்பல் - Hoary 141. வெண்மங்கல் - Leucochroic 142. வெண்மஞ்சள் - Ochroleucous 143. வெளிர் நீலம் - Azure 144. வெளிர் பச்சை - Celado 145. வெளிர் மஞ்சள் - Nankeen 146. வெளிர் மஞ்சள் பச்சை - Tilleul 147. வெளிர்நீலம் - Watchet 148. வெளிர்பழுப்பு - Suede 149. வெளுப்பு - Albicant 150. வைக்கோல் (நிறம்) - Stramineous
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews