👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பயனர்கள் யார் யார் தங்களை க்ரூப்களில் சேர்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வசதி வழங்கப்பட்டது.
இதுவரை பயனர்களுக்கு யார் யார் தங்களை க்ரூப்களில் சேர்க்க முடியும் என்பதை தடுக்க முடியாத சூழல் இருந்தது. இதனால் க்ரூப் அட்மின்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் க்ரூப்களில் சேர்க்கக்கூடிய நிலை இருந்து வந்தது.
க்ரூப்பில் நடக்கும் உரையாடல்களில் பங்கேற்க வேண்டுமா?
ஃபேஸ்புக்கின் வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களுக்கு அதிக தனியுரிமையை வழங்கும் நோக்கில், க்ரூப்பில் நடக்கும் உரையாடல்களில் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க முடியும்.
க்ரூப்களை ஸ்கிரீன் செய்யும் வசதி:
வாட்ஸ்அப் க்ரூப்பில் இருந்து வெளியேறும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இவ்வாறு செய்யும் போது மற்றவர்கள் காயப்படுத்தப்படும் நிலை இருக்கிறது. புதிய பிரைவசி செட்டிங்ஸ் மூலம் பயனர்கள் அவர்கள் இருந்த க்ரூப்களை ஸ்கிரீன் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
பிரைவசி செட்டிங்:
"வாட்ஸ்அப் க்ரூப்களை கொண்டு பயனர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுவோர் மற்றும் பலருடன் இணைந்திருக்க முடியும். எனினும், பயனர்கள் மிகமுக்கிய உரையாடல்களுக்கு க்ரூப்களை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், பிரைவசி செட்டிங் மாற்றப்பட்டு, புதிய வசதி வழங்கப்படுகிறது," என வாட்ஸ்அப் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வாட்ஸ்அப் செயலியில் பிரைவசி செட்டிங்கை மாற்றுவது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்:
1. முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் செல்ல வேண்டும்.
ஆண்ட்ராய்டு பயனர்கள்: மோர் ஆப்ஷன் -- செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் -- நெக்ஸ்ட் -- பிரைவசி மெனுவில் உள்ள க்ரூப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
ஐபோன் பயனர்கள்: கியர் ஐகானை க்ளிக் செய்து அக்கவுண்ட் -- பிரைவசி மெனுவில் உள்ள க்ரூப்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
2. பின்வரும் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யவும்:
எவ்ரிவொன் (Everyone): உங்களது காண்டாக்டில் இல்லாதவர்கள் உள்பட யாரும் உங்களை க்ரூப்களில் சேர்க்கக் கூடாது என்றால், எவ்ரிவொன் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
மை காண்டாக்ட்ஸ் (My Contacts): இந்த ஆப்ஷனை தேர்வு செய்யும் போது உங்களது காண்டாக்ட்டில் இருப்பவர்கள் மட்டும் உங்களுக்கு க்ரூப் இன்வைட் விடுக்கலாம். க்ரூப்பில் சேர வேண்டுமெனில் இன்வைட் காலாவதியாகும் முன அதனை ஏற்றுக் கொண்டு க்ரூப்பில் சேர்ந்து கொள்ளலாம்.
நோபடி (Nobody): க்ரூப்பில் சேரும் முன் அதற்கான அனுமதியை நீங்கள் வழங்க வேண்டும். இவ்வாறு செய்ய மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது.
3. இனி ....
Done அல்லது OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U