தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 24, 2019

தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
எந்த மொழி படித்தாலும் தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். தர்மமூர்த்தி ராவ் பகதூர் அறக்கட்டளையின் நிறுவனர் 150வது பிறந்தநாள் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு பேசுகையில், உயர் தர கல்வியை வழங்க தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை தேவையான ஒன்று என்றும், ஆங்கிலம், தெலுங்கு, பிரெஞ்ச் உள்ளிட்ட எந்த மொழி படித்தாலும் தொடக்க கல்வி தாய்மொழி கல்வியாக இருக்க வேண்டும் என்றும், மற்ற மொழிகள் எல்லாம் அடுத்தபடியாகவே அமைய வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து பேசிய வெங்கய்ய நாயுடு, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று தெரிவித்த வெங்கய்ய நாயுடு, துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும் என்றும், உணவு பழக்கம் குறித்து கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்க வேண்டும். மக்கள் நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டும், அப்படி சம்பாதித்த பணத்தில் சமூகப் பணிக்கும் செலவிட வேண்டும். இந்தியா எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews