பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 13, 2019

பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் தொடர்பான அவமதிப்பு வழக்கில், அரசு தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை ஹக்கீம் தாக்கல் செய்த மனு தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு குழு அமைத்தது. அக்குழு 2018--2021க்கான கட்டணத்தை நிர்ணயித்துவிபரங்களை வெளியிட உத்தரவிடவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 2018 மார்ச்சில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, &'2018 ஏப்.,30 க்குள் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து, அரசின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்,&' எனக்கூறி பைசல் செய்தனர். இதை நிறைவேற்றாததால் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் கண்ணப்பன், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயக்குழு தனி அலுவலர் ஞானசேகரன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஹக்கீம் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசுத் தரப்பில், &'8105 பள்ளிகள் விண்ணப்பித்தன. 7903 பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயித்து, குழுவின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 202 பள்ளிகளுக்கு அங்கீகாரம், கட்டட உரிமம் உட்பட முக்கிய ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. அவற்றை சமர்ப்பிக்கும்பட்சத்தில் கட்டணம் நிர்ணயித்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,&' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதிகள், &'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து செப்.,13 அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,&' என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews