Breaking

Sunday, August 25, 2019

சிட்டிஸ் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் பள்ளிகள் பிரான்ஸ் மேம்பாட்டு முகமை குழு சென்னை பள்ளிகளில் ஆய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சிட்டிஸ் திட்டத்தின் கீழ் செயல்படுத்தபடவுள்ள ஸ்மார்ட் பள்ளிகள் தொடர்பாக பிரான்ஸ் ேமம்பாட்டு முகமை திட்ட அதிகாரிகள் குழு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 5 நாள் ஆய்வு மேற்கொண்டனர்.பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சிட்டிஸ் திட்டத்தின்படி சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் பள்ளிகள் திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. இந்த திட்டத்தின்படி சென்னை மாநகராட்சி பள்ளிகள் சீரமைக்கப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 95.25 கோடியாகும். இதில் ₹76.2 கோடியை பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும். மீதம் உள்ள தொகை மத்திய மாநில அரசுகள் இணைந்து வழங்கும். சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். பள்ளிகளில் ேதாட்டம் மற்றும் கட்டிடங்களின் மாடிகளில் மாடித் தோட்டம் அமைக்கப்படும். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்பு இருக்கும். அதிக அளவில் ஆய்வு கூடங்கள் ஏற்படுத்தப்படும். இந்த ஆய்வு கூடங்கள் அனைத்தும் சர்வதேச தரத்தில் இருக்கும்.
இரண்டாவது கட்டமாக மாணவர்களின் கற்றல் திறனை ேமம்படுத்துவதற்கான வசதிகள் செய்யப்படும். மூன்றாவது கட்டமாக ஆசிரியர்களுக்கான கற்றல் திறனை ேமம்படுத்துவதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும். அடுத்தகட்டமாக, மாணவர்களின் அனைத்து தகவல்களும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்படும். டேப் மூலம் கல்வி கற்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். அதிக அளவில் கல்வி தொடர்பான கலந்தாய்வு கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக பல்துறை வல்லுனர்கள் அடங்கிய குழு 5 நாட்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு நடத்தியது. இந்த குழு துணை ஆணையர் (கல்வி ) குமரவேல்பாண்டியன், சென்னை ஸ்மார் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் செரூபல், மண்டல அலுவலர் பாபு ஆகியோரிடம் இந்த திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இதில் சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் அனுப்பிய திட்ட அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 5 மாநகராட்சி பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்தனர். மேலும் மாநகராட்சி பள்ளி கல்வி அலுவலர்கள், தலைமை ஆசியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோரிடம் கருத்துகளை கேட்டறிந்தனர். இதைத் தவிர்த்து பெற்றோர் மாணவர் சங்க உறுப்பினர்களிடம் கலந்துரையாடினர். இதனைத் தொடர்ந்து இந்த திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பாக ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழுவானது 6 மாதம் கழித்து மீண்டும் சென்னையில் ஆய்வு நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog