Breaking

Sunday, August 25, 2019

உயர்கல்வி நிறுவனங்களில் சிசிடிவி கேமரா பொருத்துவது எப்போது?: ஊழியர்கள் கேள்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது எப்போது என்று அரசுக் கல்லூரி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுவதும் உள்ள அரசுக்கல்லூரிகள், அரசு பல்கலைக்கழகங்களில் ராகிங், பாலியல் சீண்டல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, வளாகங்களின் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த பல்கலைக்கழகங்களுக்கு கடந்த ஆண்டு பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பியது.ஆனால் தமிழகத்தில் உள்ள பல அரசுக்கல்வி நிறுவனங்களில் இந்த விதி அமல்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக அரசுக்கல்லூரி ஊழியர்கள் கூறியதாவது:அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிப்பதற்கான கட்டிடங்கள் இல்லை. சில உயர்கல்வி நிறுவனங்கள் கல்லூரி, நுழைவுவாயிலில் மட்டும் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். சென்னை நகரின் சில அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முறையாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. அது பொருத்தப்பட்டால் அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங், பாலியல் சீண்டல்கள் கட்டுப்படுத்தப்படும். பிற சமூக விரோத நடவடிக்கைகளும் குறையும். அதனால் குறிப்பிட்ட சுற்றறிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளதை யுஜிசி உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அரசுக்கல்லூரி ஊழியர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog