👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கையை அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநிலங்களவை ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) புதன்கிழமை தெரிவித்தது.
இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்திருப்பதாவது:
மாநிலங்களவை ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டத்தின் கீழ் மாநிலங்களவை பயிற்சி நிதி ஆதரவுத் திட்டம் மற்றும் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கை அமைப்பது ஆகியவற்றுக்கான நடைமுறைகளை மாநிலங்களவை தொடங்கியுள்ளது.
இந்த இருக்கைக்கு நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவை, செயலகங்களின் முன்னாள் அதிகாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்கள் ஆவர். இந்த இருக்கையின் காலம் இரு ஆண்டுகள் ஆகும். ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கக் கூடியதாகும். இருக்கைக்கு ரூ.20 லட்சம் நிதியும், நிச்சயமற்ற மானியமாக ரூ.2.50 லட்சமும் அளிக்கப்படும்.
இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பல்வேறு அம்சங்கள் மீது ஆராய்ச்சிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2009-இல் மாநிலங்களவை பயிற்சி நிதி ஆதரவுத் திட்டத்தை ஏற்படுத்தியது. இதை திறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்காக மாநிலங்களவையின் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தற்போதைய திட்டத்தில் சீரமைப்பைக் கொண்டு வந்தார்.
இத்திட்டமானது மாநிலங்களவை ஆராய்ச்சிக் கல்வித் திட்டம் (ஆர்எஸ்ஆர்எஸ்) எனும் பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கை, மாநிலங்களவை பயிற்சி நிதி ஆதரவுத் திட்டம், மாநிலங்களவை மாணவர்கள் பங்கேற்பு பயிற்சித் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U