👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உயர்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இந்தாண்டுக்கான உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலபாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தங்களுடைய மேல்நிலைப்படிப்பில் (உதாரணத்திற்கு +2) குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். அத்தகைய மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மாநில பாடத்திட்டம் / சி.பி.எஸ்.சி., / ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மேல்நிலை படிப்பில் 80 சதவீத மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று, மருத்துவம், பொறியியல், அறிவியல் போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெற்றோரது ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும்.உதவித்தொகை எண்ணிக்கை: 41 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 41 ஆயிரம் மாணவிகள் என மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேல்நிலை வகுப்பில் அறிவியல், வணிகவியல் மற்றும் கலை பாடப்பிரிவை படித்தவர்களுக்கு முறையே 3:2:1 என்ற விகிதாசாரத்தில் உதவித்தொகை எண்ணிக்கை பிரித்து வழங்கப்படுகிறது. மேலும், ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடும் உண்டு.உதவித்தொகை விபரம்: இளநிலை பட்டப்படிப்பில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. முதுநிலை பட்டப்படிப்பில் ஆண்டுக்கு 20 ஆயிரம் வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31விபரங்களுக்கு:
https://scholarships.gov.in/
எவ்வளவு ரூபாய் கிடைக்கும்?
கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதே போல், முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும். ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகள் படிக்கும் மாணவர்களாக இருந்தால், முதல் மூன்று ஆண்டுகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
மொத்தம் 82 ஆயிரம் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில் மாணவர்கள், மாணவிகள் என தனித்தனியே சரிசமமாக வழங்கப்படுகிறது. அதாவது 41 ஆயிரம் மாணவர்கள், 41 ஆயிரம் மாணவிகள் ஆவர். பள்ளி மேல்நிலைப்படிப்பில் அவர்களின் பாடப்பிரிவுக்கு ஏற்றவாறு உதவித்தொகை மாறுபடும். அறிவியல், வணிகம், கலை ஆகிய பிரிவிகளுக்கு 3:2:1 என்ற விகிதாச்சாரத்தில் உதவித்தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இடஒதுக்கீடு:
எஸ்சி பிரிவினருக்கு 15%, எஸ்டி பிரிவினருக்கு 7.5%, ஓபிசி பிரிவினருக்கு 27%, மாற்றுத்திறனாளிகளுக்கு 5% என்ற அளவில் உதவித்தொகையில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு உண்டு.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள மமாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://scholarships.gov.in/ தளத்தில் மாணவர்கள் புதிதாக தங்களது சுயவிபரங்களை அளித்து பதிவு செய்தல் வேண்டும். பின்பு, ஆன்லைனில் விண்ணப்பதிவு சரிபார்க்கப்படும். உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் மாணவர்களிடத்தில் இருக்கும்பட்சத்தில், அவர்களின் வங்கிக்கணக்கிற்கே நேரடியாக உதவித்தொகை செலுத்தப்படும்.
இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு மத்திய அரசின் உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பார்க்கவும்:
https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U