ஜிமெயில் அக்கவுண்ட்டில் தகவல்களை சேமிக்கும் வழக்கம் பலரும் கொண்டிருக்கின்றனர். சிலர் தனிப்பட்ட விவரங்களான புகைப்படம், வங்கி விவரங்கள் போன்றவற்றை மற்றவர்களுக்கு அனுப்ப மின்னஞ்சல் சேவையை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் முக்கிய விவரங்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. ஜிமெயில் சேவையில் கூகுள் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை சேர்த்து வருகிறது. எனினும், ஜிமெயில் விவரங்களை முழுமையாக பேக்கப் செய்து அவற்றை மேலும் பாதுகாக்கலாம். இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
இவ்வாறு செய்ய கணினி அல்லது மேக் சாதனம் மற்றும் சீரான இணைய வசதி அவசியம் ஆகும். இத்துடன் ஆர்ச்சிவ் ஃபைலை டவுன்லோடு செய்ய போதுமான மெமரியும் அவசியம் ஆகும்.
கூகுள் பயனர்களின் ஜிமெயில் அக்கவுண்ட் தகவல்களை பேக்கப் செய்யும் பல்வேறு ஆப்ஷன்களை வழங்குகிறது. அந்த வகையில் பயனர் ஜிமெயில் விவரங்களை கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவில் சேமிப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
2 - மின்னஞ்சல் முகவரியில் லாக் இன் செய்ய வேண்டும்.
3 - லாக்-இன் செய்ததும் பயனர்கள் டவுன்லோடு செய்ய வேண்டிய டேட்டாவுக்கான சேவைகளை தேர்வு செய்ய வேண்டும்.
4 - இந்த பட்டியலில் ஜிமெயில், மேப்ஸ், ஆக்டிவிடிஸ், நியூஸ், காலென்டர், கான்டாக்ட்ஸ், யூடியூப் போன்றவை இருக்கின்றன.
5 - தேர்வு செய்ததும். 'Next Step' பச்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
6 - இனி பயனர்கள் ஆர்ச்சிவ் ஃபார்மேட்-ஐ கஸ்டமைஸ் செய்து ஆர்ச்சிவ் ஃபிரீக்வன்சி, ஃபைல் டைப், ஃபைல் சைஸ் உள்ளிட்டவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
7 - இவ்வாறு செய்ததும் 'Create Archive' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
8- இந்த வழிமுறை நிறைவுறும் வரை காத்திருந்து பின் டவுன்லோடு செய்ய வேண்டும்