👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிபிஎஸ் சீட் இல்லாத நிலையில் எதற்காக கவுன்சலிங் அழைத்து அலைக்கழிக்க வேண்டும் என்று மருத்துவ கலந்தாய்வு நடந்த ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்திலேயே மாணவர்கள், பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர்.தமிழகத்தில் 2017ம் ஆண்டு முதல் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது. தமிழகத்தில் 1,23,078 பேர் தேர்வு எழுதினர். அதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிந்தது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 39,013 பேர்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 29,007 பேரும் என மொத்தம் 68,020 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.
ஜூலை 8ம் தேதி முதல் ஓமந்தூரார் பல்ேநாக்கு மருத்துமவனை வளாகத்தில் கலந்தாய்வு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய கலந்தாய்வுக்கு 2,176 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பொதுப்பிரிவு இடங்கள், பிசி, எம்பிசி பிரிவு இடங்கள் காலியாக இல்லை. தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் பிரிவு வாரியாக இடங்கள் காலியாக இருந்தது. அதனால் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களில் 1,554 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 622 மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றனர். பிற்பகலில் இடஒதுக்கீட்டு பிரிவின்கீழ் பிசிஎம் பிரிவில் கம்யூனிட்டி ரேங்க் 270 முதல் 600 வரை பெற்ற மாணவர்கள், எம்பிசி/டிஎன்சி பிரிவில் 1,182 முதல் 1,674 வரை ரேங்க் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களுக்கான இடஒதுக்கீட்டு பிரிவில் அரசு கல்லூரிகளில் காலியிடங்கள் எதுவும் இல்லை. தனியார் பல் மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே இடம் இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு நடந்த அரங்கம், அரங்கத்துக்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு சில நிமிடங்கள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பெற்றோர், மாணவர்களை போலீசார் சமாதானப்படுத்தி வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். சீட் இல்லாத நிலையில் எதற்காக கவுன்சலிங் அழைக்க வேண்டும் பெற்றோர் கேள்வி எழுப்பியுளனர். நேற்றைய கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருந்த 90 இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் இருந்த 104 இடங்கள், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 139 இடங்களை மாணவர்கள் தேர்வு செய்திருந்தனர்.
இதுகுறித்து தேர்வுக்குழு அதிகாரிகள் கூறுகையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டபோர், பழங்குடியினர் இடங்களுக்கான கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டபோது, அரசுக்கல்லூரிகளில் உள்ள பெரும்பாலான இடங்கள் நிரம்பியிருந்தன. அவர்கள் தேர்வு செய்ய தனியார் பல் மருத்துவக்கல்லூரி இடங்கள் மட்டுமே இருந்தன. முதல்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட அனைவருமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ளவர்கள். வழக்கமாக அழைக்கப்படும் எண்ணிக்கையிலேயே மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதில் தவறான நடைமுறை எதுவும் இல்லை. இந்நிலையில் போதுமான இடங்கள் இல்லை என்று மாணவர்கள், பெற்றோர் கருதுவதால் ஜூலை 12ம் தேதி 4 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய மாணவர்கள், ஜூலை 13ம் தேதி 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று சீட் தேர்வு செய்யலாம் என்றனர்.
மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை முன் பெற்றோர்களுடன் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித முன்னறிவிப்புமின்றி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோர்களை போலீஸ் உதவியுடன் மருத்துவ கல்வி இயக்கம் அப்புறப்படுத்தியது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு கடந்த 9-ம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கியது.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான கலந்தாய்வுக்காக இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ல் துவங்கி 20ம் தேதி நிறைவடைந்தது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 39 ஆயிரத்து 13 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 29 ஆயிரத்து 7 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி அரசுக்கல்லூரிகளில் உள்ள 3250 இடங்களுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள 31,353 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 5 சதவீத இடங்களுக்கு 74 பேரும், விளையாட்டு பிரிவில் உள்ள 8 இடங்களுக்கு 285 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான பிரிவில் உள்ள 11 இடங்களுக்கு 691 பேரும் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி சிறப்பு பிரிவினருக்கான முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினருக்கான மருத்துவக்கலந்தாய்வு 8-ம் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 4-ம் நாளான இன்று அனைத்து கல்லூரிக்களுக்கான இடங்கள் நிரம்பியது. இடங்கள் நிரம்பியதால் இன்றைய கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் ஏமாற்றமடைந்து அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை முன் பெற்றோர்களுடன் மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U