👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரூர் பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமானது பற்றி விசாரிக்க எஸ்பிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரியில் பொருளியல் துறை தலைவராக பணியாற்றி வந்தவர் இளங்கோவன்(52). மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுக்கிறார் என இளங்கோவன் மீது புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து இளங்கோவன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கில் ஜாமீன் கேட்டு இளங்கோவன் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 28ம் தேதி நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டோபர், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கரூர் நகர டி.எஸ்.பி கும்மராஜாவை கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி அவரும் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீதிபதி டிஎஸ்பியை பார்த்து, ‘இளங்கோவன் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அதற்கான விளக்கம் அளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை நேற்றுமுன்தினம் மீண்டும் நடந்தது. டிஎஸ்பி கும்மராஜா நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப்பத்திரிகை, இவ்வளவு நாள் ஏன் தாமதப்படுத்தியதற்கான காரணத்தையும் தாக்கல் செய்தார். என்பதற்கான அறிக்கையும் டிஎஸ்பி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து இளங்கோவனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. பின்னர் இளங்கோவன் சிதம்பரம் கோர்ட்டில் தினந்தோறும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘விசாரணை அதிகாரியின் காலம் தாழ்த்தும் போக்கினால் குற்றத்தின் தன்மையை உணரவில்லை என்பது தெரிகிறது. இது எதிரி ஜாமீன் பெற காரணமாகி விட்டது. குற்றத்தின் தன்மையை உணராத உரிய சட்டப்பிரிவுகளின்படி விசாரணை நடத்தாத இந்த செயலை ஆய்வு செய்து எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U