👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறையில் காலிப்பணியிட பட்டியல் சேகரித்து மாவட்டங்கள் தோறும் அறிக்கை அளிக்க ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் மிக முக்கிய தொழிலாக உணவுப்பொருட்கள் விற்பனை உள்ளது. சிலர் உணவுப்பொருட்களில் கலப்படங்கள், போலி உணவுப்பொருட்கள் தயாரித்து விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர்.இதில் சர்க்கரையில் ஜவ்வரிசி, மிளகாய் பொடியில் செங்கல் பொடி, பருப்பு வகைகளில் சிறிய கற்கள், காபி தூளில் புளியங்கொட்டை தூள் என்று உணவுப்பொருட்களின் எடையை கூட்டி லாபம் சம்பாதிக்க கலப்படங்கள் அதிகரித்துள்ளதாக புகார்கள் உள்ளது. மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தரமற்ற, கலப்பட உணவுப்பொருட்களை ஆய்வு செய்ய மாநிலங்கள் தோறும் உணவு பாதுகாப்பு ஆணையர்கள் தலைமையில் மாவட்டங்களுக்கு ஒரு உணவு பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களின் கீழ் தாலுகா வாரியாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் நேரடியாக வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், டீக்கடைகள் என்று உணவு சார்ந்த நிறுவனங்களில் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு 14 நாட்களில் ஆய்வு செய்து முடிவுகளை அனுப்ப வேண்டும்.
இதில் கலப்படம் உறுதியானால் தண்டனை விதிக்கப்படும். தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் தலைமையில், மாநிலம் முழுவதும் சேகரிக்கும் உணவு பொருள் தரத்தை ஆய்வு செய்வதற்காக சென்னை, சேலம், தஞ்சாவூர், கோவை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் ஆய்வுக்கூடங்கள் இயங்கி வருகிறது.இவற்றில் இளநிலை உணவு பகுப்பாய்வாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கடந்த ஆண்டு ஆய்வு செய்து அனுப்பிய உணவுப்பொருட்களின் மாதிரிகள் குறித்து இறுதி முடிவு கிடைக்காமல் உள்ளது. இதனால் ஆய்வுக்கூடங்களில் உள்ள மாதிரிகளும் காலாவதியாகி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில உணவுப்பொருட்கள் கெட்டுப்போன பின்னர் அதனை எப்படி ஆய்வு செய்ய முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்களை மாவட்டங்கள் தோறும் உள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 5 பேர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U