கல்விக் கொள்கை எல்லாம் நல்லது, ஆனால் நடைமுறை.. சிறப்புக் கட்டுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

கல்விக் கொள்கை எல்லாம் நல்லது, ஆனால் நடைமுறை.. சிறப்புக் கட்டுரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பாதிக்கும் மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செய்தது. சம்பள உயர்வு தொடங்கி, சங்கடம் தீர்க்க வலியுறுத்துவது வரை, வித விதமான போராட்டங்கள். இப்படிப் பட்டட போராட்ட வீரர்கள் தற்போது இருக்கிறார்களா என்று யோசிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கை பற்றிய எந்தவிதமான விவாதங்களும் தொடங்கவே இல்லை.
காற்றுள்ள போதே துாற்றிக் கொள் என்பது போல, புதிய கல்விக் கொள்கை வரைவு பட்டியல் வெளியிட்டு, அது பற்றிய கருத்துக் கூற, மத்திய அரசு கால அவகாசம் தந்துள்ளது. இந்த காலட்டத்தில், ஆசிரியர்கள் குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் வெளிப்படையான விவாதங்கள் நடத்தி, அது பற்றிய கருத்துகளை உருவாக்கி, தேவை எனில் திருத்தங்களை கூறவேண்டும். அதை விடுத்து, இது அறிமுகம் செய்த பின்னர் கூச்சல் போடுவதோ, மாற்றத்தை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதோ வீண் வேலை. பியுசி முடிவுக்கு வந்து, பிளஸ் 2 அறிமுகம் ஆன காலத்தில் ஆங்கிலப்புலமை கொண்ட பெரியவர்கள் தங்களை ஓல்ட் எஸ்எஸ்எல்சி என்று பெருமை பொங்க மார்தட்டிக் கொண்டார்கள். இன்றைய கல்விக் கொள்கையில் பல இன்ஜினியர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்கு அவர்களின் தொழில்நுட்பட அறிவை மற்றவர்களுக்கு ஆங்கிலத்தில் புரிய வைக்க இயலாதது தான் காரணம் என்று கூறப்படுகிறது.
தொடக்கப்பள்ளிகளில் செயல்முறைக் கல்வி வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கற்றல் அட்டைகள் போன்றவை அரசு பள்ளிகளில் போதுமானதாக இருக்கிறதா என்றால், ஆம் என்று சொல்ல இயலவில்லை. இப்படி கற்பித்தலுக்கு தேவையான கருவிகள் கூட இல்லாமல் தான் பல பள்ளிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில், தனியார் பள்ளிகள் ஆதிக்கம் வலிமை பெற்றுக் கொண்டே வருகிறது. 2018–2019ம் கல்வியாண்வில் 3,7459 அரசு பள்ளிகள், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இது தவிர, சிபிஎஸ்சி, மெட்ரிக், இன்டர் நேஷனல் பள்ளி, பிளே ஸ்கூல் என்று உலக நாடுகளில் என்ன என்ன பெயர் இருக்கிறதோ அதைத்து வகை பள்ளிகளும் தமிழகத்தில் உள்ளன. இவை அதனைத்தும் தனியார் நடத்துவது. இவற்றை அரசு வேடிக்கை பார்க்கலாமே தவிர்த்து பாடதிட்டங்களில் தலையீடு செய்ய இயலாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews