மாணவர்களை வெளியே தள்ளிய வேலம்மாள் பள்ளி..! பாதுகாப்புக்கு யார் பொறுப்பு.? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

மாணவர்களை வெளியே தள்ளிய வேலம்மாள் பள்ளி..! பாதுகாப்புக்கு யார் பொறுப்பு.?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை வேலம்மாள் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு 3 நிமிடம் தாமதமாக சென்றதால், 3 ஆம் வகுப்பு மாணவர்களை இரும்பு கேட்டுக்கு வெளியே நிறுத்தி தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பின்றி சிறுவர்கள் வீதியில் அமரவைக்கப்பட்ட கொடுமை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. click here to watch the video சென்னை முகப்பேரில் 1986 ஆம் ஆண்டு கூரை கொட்டகையில் 150 மாணவ மாணவிகளுடன் தொடங்கப்பட்ட இந்த வேலம்மாள் பள்ளிக்கூடம் தான், 33 ஆண்டுகளில் 40 பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும், மருத்துவமனையையும் கொண்ட வேலம்மாள் குழுமமாக உயர்ந்து நிற்கின்றது..! நல்ல காசு..! நல்ல தோசை..! என்ற நிறுவனர் எம்.வி.முத்துராமலிங்கத்தின் உயர்ந்த கல்வி கொள்கை தான் குறுகிய காலத்தில் வேலம்மாள் குழுமத்தின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம்..!
ஒழுக்கத்திற்கும், காலம் தவறாமைக்கும் என்றும் முக்கியத்துவம் அளிப்பதாக கூறிவரும் வேலாம்மாள் குழுமத்தின் மதுரை பள்ளியில் தான் 3 நிமிட காலதாமதத்திற்காக மாணவர்களை இரும்பு கேட்டுக்கு வெளியே நிறுத்தி தண்டனை வழங்கி வருகின்றனர். இந்த கெடுபிடியால் பெற்றோர் உடனிருந்தால் பள்ளியில் இருந்து பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து சென்று விடுகின்றனர். ஆட்டோவிலோ அல்லது வேறு நபர்களின் வாகனத்திலோ பள்ளிக்கு வரும் மாணவர்களின் நிலைமை தான் பரிதாபத்தின் உச்சம்..! இந்த சிறுவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இரு மாணவர்களும் மாலை வரை மொட்டை வெயிலில் கேட்டுக்கு வெளியிலேயே தவம் இருக்க வேண்டும், இது தான் இவர்களின் கால தாமதத்திற்கான தண்டனை..! பள்ளி என்றால் கட்டுப்பாடு இருந்தால் தான் சரியாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது..! கட்டுப்பாடு என்றால் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அல்லவா ? 3 நிமிடம் தாமதமாக வந்த மாணவர்கள் கேட்டிற்கு வெளியே காத்திருக்க... 15 நிமிடம் தாமதமாக வரும் வேலம்மாள் பள்ளி வாகனத்திற்கு மட்டும் எந்த வித நேரக்கட்டுப்பாடும் இன்றி உடனடியாக இரும்பு கேட்டு திறந்து விடப்படுகின்றது..!
இந்த கட்டுப்பாடு எதற்கு என்றால், சில ஆயிரங்கள் செலவானாலும் பரவாயில்லை நம் குழந்தைகள் பள்ளி வாகனத்தில் சென்றால் எந்த வித சிக்கலும் இன்றி பள்ளிக்குள் சென்று விடுவார்கள் என பெற்றோர்கள் நினைத்து பள்ளி வாகனத்தில் வந்து செல்ல பணம் கட்ட வேண்டும் என்ற உயர்ந்த வியாபார நோக்கத்திற்காக என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்..! 5 நாட்கள் தொடர்ச்சியாக ஒரு மாணவனோ- மாணவியோ விடுமுறை என்றால் ரீ அட்மிஷன் முறை வேலம்மாள் குழும பள்ளிகளில் நடைமுறையில் இருப்பதால் தங்கள் வீட்டு பிள்ளைகளை இங்கு சேர்த்து விட்டு இலவு காத்த கிளியாக பள்ளி வாசலில் தவமிருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வேலம்மாள் பள்ளி தரப்பில் விளக்கத்தை பெற பள்ளிக்கு சென்ற போது பதில் அளிக்க மறுத்து விட்டனர். பள்ளிக் கல்வித்துறையும், தனியார் பள்ளிகளில் நடக்கின்ற இது போன்ற அத்துமீறல்களை வாய் மூடி வேடிக்கை பார்த்து வருவதால் தனியார் பள்ளிகளின் அத்துமீறல்களுக்கு பாடம் புகட்டபோவது யார் ? என்ற கேள்வியே தொக்கி நிற்கின்றது..!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews