கருகும் தமிழக கல்வித் துறை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

கருகும் தமிழக கல்வித் துறை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காமராஜர் ஆட்சிக் காலத்தில், பள்ளி செல்லும் குழந்தைகளை விட, செல்லாதவர்கள் அதிகம். வறுமை உட்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும், போதுமான பள்ளிகளும் இல்லை. தமிழகத்தில் நுாற்றாண்டு கண்ட பள்ளிகள், கல்லுாரிகளை எண்ணி பார்த்தாலே, இவற்றின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தது என்பது தெரியும். இதற்கு தீர்வு காண காமராஜர் செய்த முயற்சிதான், அவருக்கு கல்விக் கண் திறந்த காமராஜர் என்ற பட்டத்தையே பெற்றுத்தந்தது. கல்வியை இலவசமாக வழங்க வேண்டும், 3 கிலோ மீட்டர் துாரத்திற்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும். அங்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்று கல்வியை தமிழகத்தில் கால் ஊன்ற செய்தவர் காமராஜர். இதனால் தான், குறைந்தபட்சம் 5ம் வகுப்புவரை படித்த ஆண், பெண்கள் எண்ணிக்கை விரைவில் உயரத் தொடங்கியது. பின்னர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தனியார் பள்ளிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அது வரையில் குடும்ப சொத்தை விற்று பள்ளி நடத்தியவர்களை மட்டும் தான், தமிழகம் பார்த்தது. அதன் பின்னர் கல்வி வியாபாரமாக்கப்பட்டது. வீதிகள் தோறும் நர்சரி பள்ளிகள் தொடங்கப்பட்டன. கல்வித்துறை அதிகாரிகள் கண்களை காசு மூடிக் கொண்டது. இதனால் அங்கீகாரம் வாங்க வேண்டிய நிலை கூட இல்லை. தற்போது கூட, 498 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் நடப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. புதர்மறைவில் கஞ்சா விற்கிறான். பெட்டிக்கடையில் சரக்கு விற்கிறான், பஸ் பயணியிடம் செயினை பறித்துக் கொண்டு மாயமாகிவிட்டான்.
இவர்களை எங்களால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று காவல்துறை சொன்னால் கூட ஏற்கலாம். ஆனால் நகரின் முக்கிய இடத்தில் பெயர் பலகை வைத்து, சுமார் 500 ஆயிரம் பேருக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. பெரிய அல்லது மிகச்சிறிய கட்டடங்களில் அந்த பள்ளிகள் செயல்படுகின்றன. உண்மையே பேச வேண்டும், ஏமாற்றக் கூடாது என்.றெல்லாம் அந்த பள்ளியில் ஆசிரிய, ஆசிரியைகள் சொல்லித்தருகிறார்கள். இந்த அளவிற்கு வெளிப்படையாக நடக்கும் பள்ளி, அங்கீகாரம் பெறவில்லை என்றால், நம் கல்வித்துறை அதிகாரிகளை நினைத்து ஆத்திரப்படுவதைவிட வேறு என்ன செய்ய முடியும். எம்ஜிஆர் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவினார் என்றால், கருணாநிதி அரசு பள்ளி குறிப்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சம்பளத்தை உயர்த்தினார். இது இரண்டும் தான் இன்றைக்கு கல்வித்துறை கருகும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews