சாதனை மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 30, 2019

சாதனை மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்கள் புதிய வாக்கு இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து சாதித்துள்ளனர். சட்டப் பேரவை உள்ளிட்ட பொதுத்தேர்தல்கள் அனைத்திலும் குறிப்பிட்ட சதவீதம் வாக்குப் பதிவு குறைவாக நடக்கிறது. போதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமை என பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்பட்டாலும், பொதுத் தேர்தலில் பலருக்கு வாக்களிக்கும் ஆர்வம் இல்லாமையே இதற்கு காரணமாக உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், 100 சதவீத வாக்குப் பதிவு சாத்தியமில்லாமல் இருக்கிறது.
இருப்பினும் வாக்களிக்கும் நபர்கள் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்க வேண்டிய பல்வேறு விளம்பரங்களை தேர்தல் செய்து வருகிறது. இந்நிலையில், வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் ஏற்பாடும் தீவிரமாக வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் விரல் ரேகையை பதிவு செய்து வாக்களிக்கும் வசதியாக ஒரு கருவியை கண்டு பிடித்துள்ளனர். சென்னை கோடம்பாக்கம் பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேனிலைப் பள்ளியில் படிக்கும் ஜெகன், ஜெயச்சந்திரன், பிரதீப் குமார் என்ற 3 மாணவர்கள் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய இயந்திரத்தில் ஆதார் அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கும் நபர்களின் விரல் ரேகை மற்றும் கண்ணின் தோற்றம் ஆகியவற்றை பதிவு ெசய்து வைக்கப்படுகிறது. வாக்களிக்கும் நபர் எந்த மூலையில் இருந்தும் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து வாக்களிப்பதற்கு பதிலாக இந்த புதிய இயந்திரத்தை ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தி விட்டால் அதன் மூலம் வாக்களிக்க முடியும். அதில் வாக்காளர்கள் தங்கள் கை ரேகையை பதிவு செய்து தாங்கள் விரும்பிய வாக்காளர்களுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்க முடியும். மாணவர்களின் இந்த கண்டுபிடிப்பு குறித்து தகவல் அறிந்த பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஊக்கத் தொகை வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த புதிய கருவியை வடிவமைத்த மாணவர்கள் ஜெகன், ஜெயசந்திரன், பிரதீப் குமார் ஆகியோர் கூறியதாவது : நிறைய பேர் வேலை வாய்ப்பு காரணமாக ஊர்விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் சொந்த ஊர் அல்லது சொந்த தொகுதிக்கு சென்று வாக்களிக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது
. இதனால் ஆயிரக்கணக்கானவர்களின் வாக்கு வீணாகிறது. வாக்கு சதவீதமும் வெகுவாக குறைகிறது. இதற்கான தீர்வு காணத்தான் இந்த புதிய இயந்திரத்தை நாங்கள் வடிவமைத்துள்ளோம். அதற்காகத்தான் ஏஐ பயோ மெட்ரிக் சிஸ்டம் கொண்டு வந்துள்ளோம். அதற்காக வாக்காளர்களின் ஆதார் அட்டையை பயன்படுத்தி அவர்களின் விவரங்களை திரட்டுகிறோம். அதற்காக விரல் ரேகை மற்றும் கண் கருவிழி அமைப்பையும் இந்த இயந்திரத்தில் பதிவு செய்கிறோம். அவற்றை பயன்படுத்தி எந்த மூலையில் இருந்தும் வாக்களிக்க முடியும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews