தண்ணீர் பஞ்சத்தை போக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் அருணன்: மழை நீரை சேகரித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

தண்ணீர் பஞ்சத்தை போக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் அருணன்: மழை நீரை சேகரித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்துகிறார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கும்பகோணத்தை அடுத்த முத்தையாபிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருணன்(52). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் ரூ.15 ரை விற்பனை செய்யப்படுகிறது. அப்படி கொடுத்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் கிடைப்பதுமில்லை. மழை பெய்யாமல் நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிபோய்விட்ட நிலையில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால் குடிநீருக்காக மக்கள் படாதபாடு பட்டு வருகிறார்கள். சென்னை நகரில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், அரக்கோணத்தில் இருந்து ரயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி நடந்து வருகிறது. ஆனால் கும்பகோணம் முத்தையாபிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த ஆசிரியர் அருணன்(52) என்பவர் குடிநீர் பிரச்னையை செலவின்றி எளிதாக சமாளித்து வருகிறார்.மழை நீர் சேகரிப்பு திட்டத்தில் முன்னோடியாக திகழும் அருணன் வீட்டில் விழும் ஒவ்வொரு மழைத்துளியும் சேமிக்கப்படுகிறது. மழை நீர் முழுவதையும் தொட்டியில் சேமித்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகிறார்.
இந்த திட்டம் குறித்து ஆசிரியர் அருணன் கூறியதாவது: மழைநீரை சேமிப்பதற்காக எனது வீட்டின் மேல் பகுதியில் முழுவதும் தகர ஷீட் அமைத்து மழை நீர் ஒரு துளி கூட வீணாகாமல் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு பைபர் டேங்க் அமைத்து, அதில் மேல் பகுதியில் பெருமணல், அதன் கீழ் கூழாங்கற்கள், அதற்கு கீழ் நிலக்கரியையும் போட்டு இந்த அமைப்புகளுக்கு இடையே வலையும் வைத்துள்ளேன். இதன் மூலம் மழை நீரை சேகரிக்கிறேன்.மழை நீரை சேகரிப்பதுடன் இந்த அமைப்பு சுத்திகரிக்கவும் செய்கிறது. இந்த அமைப்பை செயல்படுத்தும்போது முதலில் பத்து நிமிடம் தண்ணீர் அசுத்தமாக இருக்கும் என்பதால், அந்த தண்ணீர் நிலத்தடிக்கு விடப்பட வேண்டும். எனது வீட்டின் மேல் ஒரு மணி நேரம் மழை பெய்தால் 2, 500 லிட்டர் தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது. அந்த தண்ணீரை எங்கள் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகளில் சேமித்து 6 முதல் 8 மாதங்கள் வரை 2 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீரை எனது குடும்பத்தில் உள்ள 4 பேரும் குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறோம்.
வருடத்திற்கு இரு முறை 2 மணி நேரம் மழை பெய்தால் போதும் ஆண்டு முழுவதும் எங்கள் குடும்பத்திற்கு சுத்தமான சுகாதாரமான தண்ணீர் இந்த முறை மூலம் கிடைக்கிறது. இது போல் கடந்த 2 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றோம். இம்முறையை எல்லோரும் பயன்படுத்தினால் தமிழகத்தில் குடி நீர் பஞ்சம் இல்லாமல் குறிப்பாக உடலுக்கு எந்தவித நோய்களும் வராமல் வாழலாம். இது போன்ற திட்டத்தை பயன்படுத்தினால் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு முற்றிலும் குறையும். இதற்காக ரூ.70 ஆயிரம் மட்டும் செலவாகிறது. இது போல் கும்பகோணத்தில் 5 ஆசிரியர்கள் செய்துள்ளோம். இவ்வாறு கிடைக்கும் தண்ணீரால், எங்களுக்கு நோய்கள் வருவதும் தடுக்கப்படுகிறது. இந்த தண்ணீரை நாங்கள் ஆய்வக பரிசோதனை செய்ததில் மிக சுத்தமான குடிநீர் என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் திட்டத்தை தொடங்க விரும்புகிறவர்கள் என்னை அணுகினால் ஆலோசனை சொல்வேன். இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மானியம் வழங்கினால் அனைத்து வீடுகளிலும் இது போல் செய்து, தண்ணீர் தட்டுப்பாட்டினை போக்க முடியும் என்றார். இதுகுறித்து அருணனின் மனைவி பிரபாவதி கூறுகையில், நாங்கள் இந்த தண்ணீரை பயன்படுத்தி சமைப்பதால் உணவு மிகுந்த சுவை உள்ளதாகவும், கெடாமலும் உள்ளது. பலமணி நேரம் ஆனாலும் கெடாமல் அதே தன்மையில் உள்ளது. சாதத்தை அடுத்த நாள் பயன்படுத்தினாலும் அதே சுவையுடன் உள்ளது என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews