மின்வாரியத்தில் களப்பணியிடங்கள் காலி ஆய்வுப்பணியில் சிக்கல்: தொழிற்சங்கம் குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

மின்வாரியத்தில் களப்பணியிடங்கள் காலி ஆய்வுப்பணியில் சிக்கல்: தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் ஒருசில இடங்களில் மட்டும் புதைவட கேபிள் மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. அதிக அளவில் வயர்கள் மூலமாகவே மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்ெவாரு ஆண்டும் பருவமழை துவங்குவதற்கு முன்பு செப்டம்பர் மாதத்தில் பருவகால முன் ஆய்வுப்பணி நடப்பது வழக்கம். தற்போது மின்வாரியத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் களப்பணியிடங்களும் உள்ளடங்கும் என்பதால் முன் ஆய்வுப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:தமிழகத்தில் 2.79 கோடிக்கு மேல் மின்நுகர்வோர் உள்ளனர். டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், மின்விநியோகம், பராமரிப்பு பணிக்கு தற்போது குறைவான பணியாளர்களே உள்ளனர். மின்நுகர்வோர், விநியோகம், கட்டமைப்பு வசதிகள் பல மடங்கு அதிகரித்த நிலையில் போர்மேன், மின்பாதை ஆய்வாளர், வயர்மேன், கள உதவியாளர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
தற்போது மின்வாரியத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், களப்பணியாளர் பணியிடங்கள் மட்டுமே சுமார் 22,000க்கும் மேல் காலியாக உள்ளன. சொற்ப பணியாளர்களை வைத்துக் கொண்டு மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்பதற்கும், அன்றாடம் புதிய மின் இணைப்புகளுக்கான விரிவாக்கப் பணிகளை மட்டுமே பார்க்க முடிகிறது. தற்போது பருவ மழை தொடங்க உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் மீண்டும் புயல் அல்லது பலத்த காற்றுடன் மழை பெய்தால் அதை எதிர்கொள்வதில் வாரியத்திற்கு சிக்கல் ஏற்படும். இதனால் தற்போது முன் பருவகால ஆய்வுப்பணி நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews