👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31-ம் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பி.தியாக ராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் பி.ஏ. தமிழ், ஆங் கிலம், சமூகப்பணி, வரலாறு மற்றும் பிஎஸ்சி உள்ளிட்ட 41 இள நிலை படிப்புகளையும் எம்பிஏ, எம்சிஏ, எம்ஏ தமிழ், வரலாறு, ஆங்கிலம் உள்ளிட்ட 39 முதுநிலை படிப்புகளையும், 17 முதுகலை டிப்ளமா படிப்புகளையும், 42 டிப்ளமா படிப்புகளையும், 39 சான்றிதழ் படிப்புகளையும் வழங்கி வருகிறது. இப்படிப்புகளில் 2019-2020-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்
www.online.tnou.ac.in என்ற இணையதளத்தை பயன்படுத்திவருகிற 31-ம் தேதி ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும், சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தருமபுரி, மதுரை, திருநெல்வேலி , நீலகிரி ஆகிய இடங்களில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் வாயிலாகவும் விண் ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங் களுக்கு 044-24306663, 64 ஆகிய தொலைபேசி எண்களில் பல் கலைக்கழகத்தை தொடர்புகொள் ளலாம். இவ்வாறுசெய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள்
www.online.tnou.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மூலமாகவும் படிப்புகளில் சேர்க்கை பெறமுடியும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 24306663, 24306664 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U