👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
போலீஸ் வேலை வாங்கித் தருவதாக சிலர் பேரம் பேசும் தகவல் வெளியாகி உள்ளதால் இப்பணிக்கு விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் பெண்கள் திருநங்கையர் உஷாராக இருக்க வேண்டும் என போலீசார் எச்சரித்துள்ளனர். 'அவரை தெரியும்; இவரை தெரியும்' என நாடகமாடும் அரசியல் கைத்தடிகளை தவிர்க்கும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.
தமிழக காவல் துறையில் டி.ஜி.பி. - போலீசார் என 1.24 லட்சம் பணியிடங்கள் உள்ளன. தற்போது 1 லட்சம் பேர் பணியில் உள்ளனர்; 24 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் காவல் சிறை மற்றும் தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள எஸ்.ஐ. மற்றும் இரண்டாம் நிலை காவலர் பணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காவல் துறைக்கு பெண்கள் மற்றும் திருநங்கையர் 2465; ஆண்கள் 5,962; சிறைத்துறைக்கு 22 பெண்கள் உட்பட 208 பேர் தீயணைப்பு துறைக்கு 191 பேர் என 8,826 பேரை தேர்வு செய்ய குழுமம் மார்ச் 6ல் அறிவிப்பு வெளியிட்டது. 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது. மேலும் திருநங்கையராக இருப்போர் ஆண் அல்லது பெண் அல்லது மூன்றாம் பாலினம் என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் தமிழ்நாடு அரவாணிகள் நல வாரிய அடையாள அட்டையை பதிவேற்றம் செய்யவேண்டும்.
ஆண் அல்லது பெண் என தேர்வு செய்தால் அதற்கு ஏற்ப உடல் தகுதி மற்றும் உடல் திறன் போட்டிகள் நடத்தப்படும். மூன்றாம் பாலினம் என தேர்வு செய்தால் பெண்ணாக கருதி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் குழுமம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்துள்ளோரை குறிவைத்து அரசியல் கைத்தடிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவது அம்பலமாகி உள்ளது. 'அமைச்சர் நமக்கு வேண்டியவர் தான்; சொன்ன இடத்தில் கையெழுத்து போடுவார். தேர்வு மட்டும் எழுதுங்கள் மற்றபடி நான் பார்த்துக் கொள்கிறேன்' என பேரம் பேசும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை சென்னைக்கு வரவழைத்து போலீஸ் உயரதிகாரிகளின் சிபாரிசுக்கு ஏற்பாடு செய்வதாக கூறி நாடகமாடுகின்றனர்; அப்பாவிகளை ஏமாற்றி பணம் கறக்கின்றனர். இந்த தகவல் போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு சென்றுள்ளதை தொடர்ந்து 'அரசியல் கைத்தடிகளை நம்பி ஏமாற வேண்டாம்' என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: அரசியல்வாதிகளின் செல்வாக்கில் போலீஸ் வேலை வாங்கி தருவதாக யாராவது ஆசை காட்டினால் நம்ப வேண்டாம். காவல் சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு தகுதி அடிப்படையிலேயே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வுக்கான தேதி சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
இளைஞர்கள் திருநங்கையர் இளம்பெண்கள் மோசடி நபர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த நபர்கள் குறித்து எங்களின் கவனத்திற்கு எடுத்து வரலாம்; புகார் அளிக்கலாம். மோசடியில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U