பயோ மெட்ரிக் கருவியில் தமிழுடன் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி இடம் பெற்றுள்ளதால் புதிய சர்ச்சை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

பயோ மெட்ரிக் கருவியில் தமிழுடன் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி இடம் பெற்றுள்ளதால் புதிய சர்ச்சை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் சேர்க்கப்பட்டு, இந்தி உட்பட 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும், தனி சாப்ட்வேரிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்தபடியே பள்ளிகளை கண்காணிக்கலாம். இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவியில் தமிழுக்கு பதில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியானது. இது ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது, பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியில் தமிழ் மொழி உட்பட 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் ஆசிரியர்களின் விவரங்களை ஆதார் அடிப்படையில் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. கடந்த வாரத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகள் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, பயோமெட்ரிக் கருவியில் மாற்றம் செய்யப்பட்டு மாநில மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பயோ மெட்ரிக் பதிவின் முகப்பதிவில் மொழி தேர்வு செய்வதற்கான புதிதாக பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், எந்த மொழியை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது’ என்றனர்.இந்தி புகுத்தப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த நிலையில், அதை நீக்கிவிட்டு தமிழை மட்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல், தமிழுடன் மொத்தம் 9 மொழிகளை பயோமெட்ரிக் கருவியில் சேர்த்திருப்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் கருவிகளில் தமிழும், ஆங்கிலமும் இடம் பெற்றிருந்தால் போதும். தமிழை நீக்கிவிட்டு இந்தியை புகுத்தியதை கண்டித்தால், வேறு மொழிகளையும் சேர்த்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழ் சேர்க்கப்பட்டு, இந்தி உட்பட 9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . தமிழகத்தில் 3,688 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 4,040 மேல்நிலைப்பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து வருகின்றனர். மேலும் ஆதாரில் உள்ள முழு விவரங்களுடன் ஆசிரியர்களின் விவரங்கள் இஎம்ஐஎஸ் என்ற இணையதளத்திலும், தனி சாப்ட்வேரிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இருந்தபடியே பள்ளிகளை கண்காணிக்கலாம். இந்த நடைமுறை கடந்த ஜூன் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவியில் தமிழுக்கு பதில் இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியானது.
இது ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தற்போது, பயோமெட்ரிக் வருகைப்பதிவு கருவியில் தமிழ் மொழி உட்பட 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது . இதகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆசிரியர்களின் வருகைப்பதிவை பயோமெட்ரிக் கருவியில் ஆசிரியர்களின் விவரங்களை ஆதார் அடிப்படையில் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது . கடந்த வாரத்தில் ஆங்கிலம், இந்தி மொழிகள் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, பயோமெட்ரிக் கருவியில் மாற்றம் செய்யப்பட்டு மாநில மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது . அதில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பயோ மெட்ரிக் பதிவின் முகப்பதிவில் மொழி தேர்வு செய்வதற்கான புதிதாக பட்டன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 9 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளதால், எந்த மொழியை வேண்டுமானாலும் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது’ என்றனர்
.இந்தி புகுத்தப்பட்டதை எதிர்த்து குரல் கொடுத்த நிலையில், அதை நீக்கிவிட்டு தமிழை மட்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்காமல், தமிழுடன் மொத்தம் 9 மொழிகளை பயோமெட்ரிக் கருவியில் சேர்த்திருப்பது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் கருவிகளில் தமிழும், ஆங்கிலமும் இடம் பெற்றிருந்தால் போதும். தமிழை நீக்கிவிட்டு இந்தியை புகுத்தியதை கண்டித்தால், வேறு மொழிகளையும் சேர்த்திருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது. ஆனால் சிலநாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக்கின் பதிப்பு மாற்றப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் கருவிகளில் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் சேர்க்கப்பட்டிருந்தது. இதுகுறித்து செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டன. இதனையடுத்து, இனி பயோமெட்ரிக் கருவிகளில் இந்தி இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்திருந்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி பயோமெட்ரிக்கில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருமொழிகளும் மாற்றப்பட்ட நிலையில் தமிழ் உள்ளிட்ட 9 மொழிகள் பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த பயோமெட்ரிக்கின் புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews