Breaking

Saturday, July 13, 2019

'போதை' வாலிபர்களுக்கு பள்ளி மாணவி கொடுத்த செருப்படி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மாணவியரின் கையை பிடித்து இழுக்க முயன்ற, 'போதை' வாலிபர்களை, மாணவி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த செஞ்சேரிமலையில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதன் அருகே, கம்மாளபட்டி சாலையில், கடந்தாண்டு, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. முருகன் கோவில், அரசு பள்ளி இருப்பதால், மதுக்கடை திறக்க, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தியதை தொடர்ந்து, மதுக்கடைக்கு மாற்று வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது.நேற்று முன்தினம், மதுக்கடையில், 'போதை' ஏற்றிய வாலிபர்கள் இருவர், பள்ளி மாணவியரின்கையை பிடித்து இழுக்க முயன்றுள்ளனர். ஒரு மாணவி துணிந்து, அந்த வாலிபர்களை செருப்பால் அடித்தார். பின், பொதுமக்கள் உதவியுடன், போலீசில், அந்த வாலிபர்களை ஒப்படைத்தனர். போலீசார் எச்சரிக்கை விடுத்து, அவர்களை அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 'மதுக்கடையை மூட வேண்டும்' என்ற கோரிக்கை, மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog