கால்நடை மருத்துவ கலந்தாய்வில் அமைச்சர் வர தாமதமானதால் 4 மணிேநரம் காத்திருந்து மாணவர்கள், பெற்றோர் அவதி : மாலை வரை கவுன்சலிங் நடந்தது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

கால்நடை மருத்துவ கலந்தாய்வில் அமைச்சர் வர தாமதமானதால் 4 மணிேநரம் காத்திருந்து மாணவர்கள், பெற்றோர் அவதி : மாலை வரை கவுன்சலிங் நடந்தது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுப்பிரிவு கால்நடை மருத்துவ கலந்தாய்வில் அமைச்சர் வர தாமதமானதால் மாணவர்கள், பெற்றோர் 4 மணி நேரத்துக்கு மேல் காக்க வைக்கப்பட்டனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகத்தில் 7 கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவம் -360 இடங்கள், புட் டெக்னாலஜி, பவுல்டிரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளில் 100 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மத்திய அரசு ஒதுக்கீடு 15 சதவீத இடங்களை மத்திய அரசு ஒதுக்கீட்டின்கீழ், மத்திய அரசு நிரப்பி வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்களை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் நிரப்பி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு மே 8ம் தேதி முதல் ஜூன் மாதம் 17ம் தேதி வரை கால்நடை மருத்துவ படிப்புக்கு 15,666 பேர், பி.எஸ்சி புட் டெக்னாலஜி, பவுல்டிரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு 2,772 பேர் விண்ணப்பித்தனர். விண்ண்ப்பித்திருந்த 18,438 பேரில் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 17,122 பேர் கொண்ட பட்டியல் ஜூலை 3ம் தேதி வெளியிடப்பட்டது.
சிறப்புப்பிரிவு, வொக்கேசனல் பிரிவு இடங்களுக்கு சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் நேற்றுமுன்தினம் கலந்தாய்வு நடந்தது. அதில் 38 பேருக்கு கால்நடை மருத்துவ படிப்பும், 5 பேருக்கு தொழிற்கல்வி பிரிவிலும் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்றைய கலந்தாய்வு மூலம் மத்திய அரசின் 15 சதவீத ஒதுக்கீடு, சிறப்புப்பிரிவு, தொழிற்கல்விப்பிரிவு இடங்கள் நீங்கலாக கால்நடை மருத்துவ படிப்புக்கு 268 இடங்கள் இருந்தது.இந்நிலையில் நேற்று தரவரிசைப்பட்டியல் அடிப்படையிலான பொதுப்பிரிவு இடங்களுக்கான கலந்தாய்வு காலை 9 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தரவரிசைப்பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை கடிதம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் தொகுதி எம்பி தேர்தல் பிரசாரத்துக்காக சென்றதால், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சரியான நேரத்தில் அங்கு வரவில்லை. இதனால் காலையில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த மாணவர்கள், பெற்றோர் கால்நடை மருத்துவக்கல்லூரி அரங்கிலேயே காக்க வைக்கப்பட்டனர். கலந்தாய்வுக்கு வந்திருந்த மாணவர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.
காலை 10.30 மணிக்கு தரவரிசையில் முதல் 15 இடங்களை பெற்ற மாணவர்கள் மட்டும் அழைக்கப்பட்டனர். அவர்களில் 11 பேர் சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியையும் 4 பேர் நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்வதாக தெரிவித்தனர். பிற்பகல் 12.30 மணிக்கு அமைச்சர் வந்து முதல் 15 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கி கலந்தாய்வை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரியில் அரங்கிலேயே மாணவர்கள், பெற்றோர் காக்க வைக்கப்பட்டனர். பிற்பகல் 12.48 மணிக்கு வந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நீண்ட உரையாற்றினார். அதன்பின் முதல் 15 இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு சேர்க்கை கடிதத்தை வழங்கிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். பிற்பகல் 1.36 மணிக்கு மதிய உணவுக்குபின் 2.45 மணிக்கு கலந்தாய்வு தொடங்குவதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் காலையிலிருந்து காத்திருக்கிறோம். அதனால் இப்போதே கலந்தாய்வை தொடங்க வேண்டும் என்று, அரங்கிலிருந்த பெற்றோர், மாணவர்கள் சிலர் பலத்த குரலில் அதிகாரிகளுக்கு பதிலளித்தனர். அதைத்தொடர்ந்து மீதமிருந்த 253 கால்நடை மருத்துவ இடங்களுக்கு கலந்தாய்வு தொடங்கி நேற்று மாலை வரை நீடித்தது. அமைச்சரின் தேவையற்ற காலதாமதத்தில் கலந்தாய்வுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், பெற்றோர் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகினர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews