👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் -4 பணி தேர்வுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
click here to watch the video
ஒருங்கிணைந்த குடிமைப் பணி காலியிடங்களுக்கான குரூப் -4 தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 14 ந்தேதி கடைசி நாள். அன்று இரவு 11.59 மணி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.இந்த மாதம் 16ம் தேதி வரை தேர்வுக்கட்டணம் செலுத்தலாம். இந்த தேர்வுக்கு, இதுவரை சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் குருப்-4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு, இறுதி நாள் எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும், இத்தேர்வுக்கு கடைசி நாள் வரை காத்திருக்காமல், உடனடியாக விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.பதிவுக்கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் பணப்பரிமாற்ற விவரத்தினை விண்ணப்பம் செலுத்தும் பக்கத்தில் உள்ள "VIEW PREVIOUS PAYMENT" என்ற இணைப்பினை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருப்- 4 தேர்வுக்கு விண்ணப்பத்தினை பதிவு செய்து, இறுதியாக சமர்ப்பித்து, இதற்கான விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்டிருந்தால் மட்டுமே, அது முழுமை பெற்ற விண்ணப்பமாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்ப எண் ஒதுக்கப்பட்ட பின்னர், அதில் உள்ள விவரங்களை மாற்ற முடியாது என்றும், அதுதொடர்பாக பெறப்படும் மின்னஞ்சல் மற்றும் மனுக்களின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயனாளர் குறியீடு, கடவுச்சொல், புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்றம், நிரந்தரப்பதிவு தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட கேள்விகளுக்கு
தேர்வாணையத்தின் விண்ணப்பதாரர் உதவி மைய எண்களான 044 -25300336, 25300337, 25300338, 25300339 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும் அல்லது
helpdesk@tnpscexams.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, கோரிக்கைகளை உரிய விவரங்களுடன் அனுப்பலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதர தகவல்களுக்கு 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், அல்லது
contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம் என்றும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வெழுத 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 6,491 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு எழுத இன்று வரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ல் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 14, எக்காரணம் கொண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U