WhatsAppல் அடுத்து வரவுள்ள 5 புதிய அப்டேட்கள் என்னென்ன ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

WhatsAppல் அடுத்து வரவுள்ள 5 புதிய அப்டேட்கள் என்னென்ன ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பயனாளர்களுக்கு வசதியாகவும், பாதுகாப்பு அம்சங்களுக்காகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது அப்டேட்டுகளை விடுத்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் அடுத்தமுக்கிய 5 அப்டேட்டுகள் குறித்து காணலாம். 1.பேஸ்புக் ஸ்டோரி ஷேரிங் (Facebook Story Sharing) வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை நேரடியாக பேஸ்புக்கில் ஷேர் செய்யும் வசதியை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் இணைந்து செயல்படுவது போலவே வாட்ஸ் அப் - பேஸ்புக்கும் செயல்படும். பேஸ்புக் டேட்டா ஷேரிங் API மூலம் இது சாத்தியப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது இது ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே சோதனையில் உள்ளது 2.நைட் மோட் வாட்ஸ் அப் அப்டேட்டில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது. ட்விட்டர், பேஸ்புக் மெசேஞ்சர், அமேசான் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இன்னும் அறிமுகம் செய்யவில்லை.
ஆனால் விரைவில் டார்க் மோட் வசதி அறிமுகம் செய்யப்படும் வாட்ஸ் அப் தெரிவித்திருந்தது. அதன்படி சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனின் சில மாடல்களில் டார்க் மோடை வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது 3.க்யூ ஆர் கோடு (QR Code) வாட்ஸ் அப் QR கோடு மூலம் எண்களை செல்போனில் பதிவேற்றும் வசதியை இந்த அப்டேட் கொடுக்கும். அதாவது வாட்ஸ் அப் QR கோடை ஸ்கேன் செய்வது மூலம் அந்த குறிப்பிட்ட எண் ஸ்மார்ட் போனில் பதிவாகும். வீ சாட் மாதிரியான செயலிகளில் ஏற்கெனவே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4.கிளீனர் ஆல்பம் லேவுட் (Cleaner album layout) கிளீனர் ஆல்பம் லேவுட் அப்டேட் விரைவில் வாட்ஸ் அப் iOSல் வரவுள்ளது.
ஒரே இணைப்பில் பல புகைப்படங்களை காணும் விதத்தில் இது அமையும். அந்த குறிப்பிட்ட ஆல்பத்தில் உள்ள புகைப்படங்களின் எண்ணிக்கையையும் இது காட்டும் 5. ப்ரொபைல் பிக்சர்ஸ் ப்ரொடெக்‌ஷன் (Profile picture protection) இந்த அப்டேட்டுக்கான வேலைகள் தற்போது ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்காக மட்டுமே நடந்து வருகின்றன. விரைவில் iOS வெர்ஷனுக்கும் கொண்டு வரப்படும். வாட்ஸ் அப் ப்ரொபைல் புகைப்படங்களை மற்றவர்கள் டவுன்லோட் செய்யும் வசதியை இது தடுக்கும். இந்த அப்டேட் மூலம் வாட்ஸ் அப் ப்ரொபைல் புகைப்படங்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதும் முடியாது என்பது கூடுதல் சிறப்பு.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews