👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கடந்த 27ம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (Answer Sheet) ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.nic.in என்ற பக்கத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கான விடைக்குறிப்புளை
jeeadv.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாநிலம் ரூர்கியில் செயல்பட்ட வரும் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் கடந்த 27ம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றனர்.
இந்த நிலையில், இந்தத் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (Answer Sheet) இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் இதனை, ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.nic.in என்ற பக்கத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இதனை டவுன்லோட் செய்யலாம்.
விடைகளில் ஏதேனும் பிழை இருந்தால், அதுபற்றி நாளை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள் முறையீடு செய்யலாம். ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வில் தகுதி பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 10 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மொத்தமாக குறைந்தபட்சம் 30 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.
JEE Advanced Answer Key 2019 பெறும் வழிமுறைகள்
(1) ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம்
jeeadv.ac.in என்ற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
(2) முதல் பக்கத்தில் Answer Key 2019 என்று கொடுக்கப்பட்டிருக்கும்
(3) மாணவர்கள் தங்களது பதிவு எண் பயன்படுத்தி (தேவைப்பட்டால்) அதனை கிளிக் செய்து, உள்நுழைய வேண்டும்
(4) விடைக்குறிப்புகள் பிடிஎப் பைலாக காட்டப்படும்.
(5) விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து, தேவைப்பட்டால் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U