👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
மதுரை அரசு மருத்துவமனை ரோட்டில் மாநகராட்சி இளங்கோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1937 ல் கட்டப்பட்டது. 1964ல் உயர்நிலைப் பள்ளியாகவும், 1978 ல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
எச்.சி.எல்., நிறுவனர் சிவ்நாடார், இப்பள்ளியின் பழைய மாணவர் ஆவார்.2011ல் மதுரை வந்த அவர் தான் படித்த இளங்கோ பள்ளியை பார்வையிட்டார். கட்டட வசதியில் பின்தங்கி இருப்பதை கண்டார்.
அப்பள்ளியை தத்தெடுத்து 15 கோடி ரூபாயில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்தார். மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியை பெற்று கட்டடங்கள் கட்டிக்கொடுப்பதற்கான பொறுப்புகளை ஏற்றார்.
ஏற்கனவே இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டடங்களை கட்டும் பணி துவங்கியது
வகுப்பறைகளுக்கு மட்டும் தனித்தனியாக மூன்று பகுதி கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
இவை அனைத்தும் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளத்தை கொண்டவை. இவற்றில் பிரதான வகுப்பறை கட்டடப்பகுதிக்கான பணி முடிந்துவிட்டது. இன்னொரு பகுதி பத்து நாளில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மூன்றாவது பகுதிக்கான பணி துவங்க உள்ளது.
மதுரையின் மாடல் பள்ளிஇது போக பள்ளி நிர்வாக கட்டடப்பகுதிக்கான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அங்கு தரைத்தளத்தில் தலைமை ஆசிரியர் அறை, அலுவலக அறை, கூட்ட அரங்கு, ஆசிரியர்களுக்கு தனித்தனியாக ஓய்வறை மற்றும் கழிப்பறைகளும், முதல் தளத்தில் பயிற்சி மையம், ஆவணங்கள் வைப்பறை, கம்ப்யூட்டர் ஆய்வகம், நுாலகம் அமைகிறது.
வளாகத்தில்சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம், சுகாதாரமான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கம்ப்யூட்டர் அறிவை வளர்ப்பதற்காக கணினி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு100 கம்ப்யூட்டர்கள் நிறுவப்படும்.
இப்பள்ளியின் கட்டட வடிவமைப்பே மாணவர்களை கவரும் வகையில் உள்ளது. அனைத்து வசதிகளும் நவீனமாக்கப்பட்டுள்ளன.
இன்னும் மூன்று மாதங்களில் அனைத்து பணிகளும் முடிந்து பள்ளி முழுமையாக பயன்பாட்டுக்கு வரும். அப்போது இது அரசுப்பள்ளிதானா என அனைவரும் ஆச்சரியப்படுவர். இப்பள்ளி மதுரை நகரின் 'மாடல்' பள்ளியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
தரமான கல்வி கிடைக்கும்மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மதுரை நகருக்குள் அரசு பள்ளியில் பயில்வோர் விகிதம் ஆண்டுதோறும் சரிகிறது. இச்சூழலில் சிவ்நாடார் மேற்கொண்ட முயற்சியால், இளங்கோ பள்ளியின் கட்டமைப்பு மேம்படுகிறது.
இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும், என்றனர்.மேம்பட்ட பள்ளிஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க தனி கூட்டரங்கு கட்டப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் கட்டமைப்பு வசதிகளில் மேம்பட்ட பள்ளிகளில் ஒன்றாக இளங்கோ பள்ளி விளங்க உள்ளது. வருகிற ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை பன்மடங்கு உயரும் என கருதுகிறோம்.-
ராஜேந்திரன், தலைமை ஆசிரியர்
மகிழ்ச்சியோடு கற்போம்
சுத்தமான குடிநீர், சுகாதாரமான நவீன கழிப்பறைகள், காற்றோட்டமான, வகுப்பறைகள், கணினி மையம், கூட்ட அரங்கம், விசாலமான நுாலகம் என அனைத்து வசதிகளையும் நாங்கள் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கல்விக்காக 15 கோடி ரூபாயை செலவிடும் சிவ்நாடாரை பின்பற்றி பிற தொழிலதிபர்களும் அரசு பள்ளிகளை மேம்படுத்த உதவ வேண்டும்
மாணவர்மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்
எங்கள் பள்ளியில் மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது. தற்போது வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது.
பிளஸ் -2 தேர்விலும் நல்ல ரிசல்ட் கிடைத்தது. இதற்கிடையே 15 கோடி ரூபாயில் கட்டமைப்பில் பள்ளி மேம்படுகிறது.
இக்காரணங்களால் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை 400ல் இருந்து 600ஐ கடந்துவிட்டது.
கட்டடப்பணிகள் முழுமையாக முடிந்துவிட்டால் இப்பள்ளியின் புகழ் மதுரை முழுவதும் பரவும். அடுத்த கல்வியாண்டில் நிச்சயம் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துவிடும்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U