ஆபத்தான பள்ளி கட்டிடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்: அசம்பாவிதம் நடக்கும் முன் கல்வித்துறை கவனிக்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

ஆபத்தான பள்ளி கட்டிடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள்: அசம்பாவிதம் நடக்கும் முன் கல்வித்துறை கவனிக்குமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கருங்குளம் அருகே பராமரிப்பின்றி சேதமடைந்த ஆபத்தான பள்ளி கட்டிடத்தில் 67 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன்பாக இவ்விஷயத்தில் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அடுத்த கிளாக்குளத்தில் இந்து ஜெயலட்சுமி என்ற பெயரில் நடுநிலைப் பள்ளி கடந்த 1948ம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது இப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் 65 பேருக்கு 5 ஆசிரியர்கள் கல்விக் கற்பித்து வருகின்றனர். இங்கு முறையாகப் பராமரிப்பு செய்யப்படாததால் சேதமடைந்த பள்ளி கட்டிடம் குறித்து இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தனர். இதையடுத்து ஆபத்தான இப்பள்ளி கட்டிடத்தில் யாரும் இருக்கக் கூடாது என்றும். புதிய கட்டிடம் கட்டும் வரை வேறிடத்தில் வைத்து பாடம் நடத்துமாறும் கருங்குளம் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வாய்மொழியாக உத்தரவிட்டார்.
இதையடுத்து நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு அருகேயுள்ள வெங்கடாசலபதி கோயில் வளாகத்தில் மரத்தடியில் வைத்து பாடம் நடத்தி வந்தனர். இதனால் வண்டுகள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு இன்னல்களால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டனர். கோயில் வளாகம் என்பதால் மாணவர்களுக்கு சத்துணவுடன் முட்டை வழங்க கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால் சிரமத்திற்குள்ளான மாணவர்கள், புதிய கட்டிடத்தை உடனடியாக கட்டித்தருமாறு கோரிக்கை விடுத்து வந்தனர். அதேவேளையில் ஆனி திருவிழாவுக்காக சீரமைப்பு பணிகளில் மேற்கொள்ளும் பொருட்டு கோயில் வளாகத்தில் பள்ளி மாணவ, மாணவர்கள் கல்வி பயில அனுமதி மறுக்கும் நிலை உருவானது. இதுகுறித்த செய்தி தினகரனில் படத்துடன் வெளியானது. இதையடுத்து பள்ளியை பார்வையிட்டு ஆய்வு நடத்திய பொறுப்பு உதவி தொடக்க கல்வி அலுவலர், ஆலயத்தை விட்டு மாணவ, மாணவிகளை உடனடியாக வெளியேற்றி, பழைய கட்டிடத்தில் கல்வி பயில கூறினார். ஒரு புறம் உடைந்து விழத்துடிக்கும் சுவர்கள். கீரல் விழுந்த சுவர்கள், உடைந்த நிலையில் உள்ள ஓடு, மழைக்காலத்தில் ஒழுகும் நிலையில் உள்ள மேற்கூரை என ஆபத்தான பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் காற்று பலமாக வீசும்போது, பள்ளி மேற்கூரையில் இருந்து பறக்கும் ஓடுகளால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
இதனால் மாணவ, மாணவிகள் அச்சத்துடனேயே தினமும் பள்ளி வந்து கல்விகற்று செல்கிறார்கள். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேச முடியாமல் ஆசிரியர்கள் பரிதவிக்கின்றனர். இதுகுறித்து அப்பள்ளி கமிட்டி முன்னாள் தலைவர் குழந்தை ஆழ்வார் கூறுகையில், ‘‘சேதமடைந்த நிலையில் இருந்த இப்பள்ளியை அரசிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகள் பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டனர். இதையடுத்து பள்ளியை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட அரசு, பள்ளியை மேம்படுத்துவார்கள் என நினைத்தோம். ஆனால், அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் இன்று வரை ஆபத்தான நிலையிலேயே பள்ளி கட்டிடம் இருந்து வருகிறது. பருவ மழை பெய்யும்போது கட்டிடத்தில் தண்ணீர் ஓழுகும். அப்போது மாணவ, மாணவிகள் எங்கே செல்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பள்ளியில் ஆவணங்களை பாதுகாக்கும் அறை கூட சரியாக இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
உயிர்மீது விளையாட்டு இதுகுறித்து பள்ளி கமிட்டி ஆயுட்கால முன்னாள் செயற்குழு உறுப்பினர் கண்ணன் கூறுகையில், ‘‘கடந்த 2011ம் ஆண்டு வரை எங்கள் கமிட்டி சிறப்பாக செயல்பட்டு வந்தது. அப்போது பள்ளி கட்டிடத்தை பழுது பார்த்தல் உள்பட பல்வேறு பணிகளை திறம்பட செய்துவந்தோம். புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அப்போது மாவட்ட கல்வி அதிகாரியும், உதவி தொடக்க கல்வி அலுவலரும் நிர்வாகத்தை கலைத்து விட்டு ஆசிரியர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கினர். அதன் பிறகு பள்ளி கட்டிடத்தை பழுது பார்க்கவே இல்லை. ஊரில் சிலர் தலையிட்டு சம்பளத்தை மட்டும் நேரடியாக கொடுப்பவர்கள் இந்த பள்ளியை எடுத்துக்கொண்டு புதிய கட்டிடம் கட்டித் தாருங்கள் என கோரினர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக அப்போதைய கல்வி அலுவலர்கள் கூறினர். தற்போது பள்ளி கட்டிடம் மிக மோசமாகி விட்டது. கட்டிடம் கட்டித் தாருங்கள் என கேட்டால் கைவிரிக்கின்றனர். திட்டமிட்டு அதிகாரிகள் பள்ளி மாணவர்களின் உயிர் மீது விளையாடி வருகின்றனர்’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews