புதிய விதிமுறைகளின்படி கல்வி கடனை பெறுவது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 16, 2019

புதிய விதிமுறைகளின்படி கல்வி கடனை பெறுவது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்விக்கடன் பெறுவதற்கு இந்த ஆண்டு, சில புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. புதிய விதிமுறைகளின் கீழ் கல்வி கடனை பெறுவது எப்படி என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி அனைத்து தரப்பினரும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற அடிப்படையில், வட்டி மானியத்தோடு கல்வி கடன்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த வகையில், ஏழை, எளிய மாணவர்கள் தரமான கல்லூரிகளில் உயர் கல்வியை தொடர்வதை உறுதி செய்யும் விதமாக, மத்திய அரசு கல்வி கடனில் புதிய திருத்தங்களை செய்து உள்ளது.
அதன்படி, இதற்கு முன் எந்த கல்லூரியில் சேர்ந்து படித்தாலும், கல்வி கடனுக்கு வட்டி மானியம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் என்றால் NAAC, NBA ஆகிய தேசிய அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்தால் மட்டுமே மாணவர்களுக்கு வட்டிமானியம் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல் மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் சட்டம் படிக்கும் மாணவர்கள் பார்கவுன்சிலின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் கல்வி கடனுக்கான வட்டி மானியம் பெறலாம். இதுவரை இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் பயில 10 லட்சம் வரை வட்டிமானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு, ஏழரை லட்சம் ரூபாய் கல்வி கடன் தொகைக்கு மட்டும் வட்டிமானியம் வழங்கப்படவுள்ளது. மேலும் ஏழரை லட்சம் ரூபாய் வரை கல்வி கடனாக பெறும் மாணவர்கள் பிணை ஆவணங்களோ அல்லது பிணை கையெழுத்தோ சமர்பிக்க தேவையில்லை.
கல்விக் கடனை ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பெறலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள www.vidhyalakshmi.co.in என்ற இணையதளம் மூலம் ஏதேனும் 3 வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம். தொடர்ந்து மாணவர்களின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். புதிய விதிமுறைகளின் கீழ், 30 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்குக் சம்பந்தப்பட்ட வங்கி கடன் அளிப்பதா அல்லது விண்ணப்பத்தை நிராகரித்ததா என்பது குறித்து தகுந்த பதில் தெரிவிக்க வேண்டும். கல்வி கடன் பெறும் மாணவர்கள் ஏழரை லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெறும் பட்சத்தில், வட்டி வசூலிக்கப்படவுள்ளது. அந்தவகையில், ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு வட்டி விகிதத்தில் கடன் வழங்கவுள்ளன. குறிப்பாக 16 சதவீதம் வரை வட்டி வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஏழரை லட்சம் வரை கல்விக்கடன் பெறும் மாணவர்கள் கடன் தொகையை 10 ஆண்டுகளுக்குள்ளும், அதற்கு மேல் கடன் பெறும் மாணவர்கள் 15 ஆண்டுகளுக்குள்ளும் கடன்தொகையை திருப்பி செலுத்த வேண்டும்.
கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள், கல்லூரிகளில் சேர்ந்ததற்கான சான்றிதழ் கண்டிப்பாக((bonafide certificate)) வைத்திருக்க வேண்டும். இதனுடன் சாதி மற்றும் வருமான சான்றிதழ்கள், ஆதார், பான் கார்டு, இருப்பிட சான்றிதழ், 10 மற்றும் 12ம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல்களையும் உடன் வைத்திருக்க வேண்டும். உரிய காரணங்களின்றி ஒருவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், குறிப்பிட்ட வங்கியின் பிராந்திய((Region)) அல்லது மண்டல((zonal)) மேலாளரிடம் புகார் தெரிவிக்கலாம். அங்கும் சரியான பதில் கிடைக்காதபட்சத்தில், pgportal.gov.in என்ற இணையதள வாயிலாக பிரதமருக்கு புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews