பட்ஜெட்டில் ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவாகிறது ? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

பட்ஜெட்டில் ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவாகிறது ?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மொத்த வரவு செலவில், ஒரு ரூபாயில் அரசின் வருவாய் மற்றும் செலவுகள் என்ன click here to watch the news full video மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவுகளில் ஒரு ரூபாயில் கடன் அல்லாத மூலதன வரவு மூலம் 3 காசுகள் கிடைக்கிறது. கடன் மற்றும் இதர பாக்கிகள் மூலம் 19 காசுகளும், பெரு நிறுவனங்கள் வருமான வரியாக 21 காசுகளும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. வருமான வரி மூலம் 17 காசுகளும், கலால் வரி மூலம் 7 காசுகளும் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி வழியாக 21 காசுகளும், வரி அல்லாத வரவாக 8 காசுகளும் அரசின் நிதி ஆதாரங்களாக உள்ளன. மொத்த செலவுகளில் , ஒரு ரூபாயில் ஓய்வூதியமாக 5 காசுகளும், மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களுக்கு 9 காசுகளும் செலவிடப்படுகின்றன. மத்திய அரசு திட்டங்களுக்கு 12 காசுகள், கடன்களுக்கான வட்டியாக 18 காசுகள், ராணுவத்துக்கு 8 காசுகள் ஒதுக்கப்படுகின்றன. மானியங்களுக்கு 9 காசுகளும், நிதி கமிசன் மற்றும் இதர ஒதுக்கீடுகளாக 8 காசுகளும், வரிகளில் மாநில அரசுகளின் பங்காக 23 காசுகளும் செலவாகின்றன. திட்டமல்லாத இதர செலவுகளுக்கு 8 காசுகள் ஒதுக்கப்படுகின்றன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews