👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 5 முதுநிலைப் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளர் க. துரையரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில், முதுகலை பாடப்பிரிவுகளுக்கான பருவத்தேர்வுகள் ஏப்ரல் 29 முதல் மே 15 ஆம் தேதி வரைநடைபெற்றது.
இதில் முதுகலைத் தமிழ், சம்ஸ்கிருதம், முதுஅறிவியல் தாவரவியல், உயிர் வேதியியல், காட்சித் தொடர்பியல் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்த தேர்ச்சிக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அக் கூட்டத்தில் மேற்கண்ட 5 பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவியர்,
www.bdu.ac.in
என்ற பல்கலைக்கழக இணையதளத்தில், தங்களது பதிவெண்களை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை காணலாம்.இதைத் தொடர்ந்து மேலும் பிற முதுநிலைப் பாடங்களின் முடிவுகளும் வெளியிடப்படும்.
அதன் பின்னர் இளநிலைப் பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் முதல்வாரத்தில் வெளியிடப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U