வளாக நேர்காணலில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 01, 2019

வளாக நேர்காணலில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
காரைக்குடி நேஷனல் பயர் சேப்டி மற்றும் பாதுகாப்பு மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கல்வி நிறுவனத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் இக்கல்லூரியில் இளங்கலை பயர் அண்ட் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பு முடித்து சென்னை, பெங்களூரு மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள பிரபல நிறுவனங்களுக்கு வேலைக்குத் தேர்வாகிச் செல்லும் மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி தாளாளர் எஸ். சையது பங்கேற்று வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், முக்கியப்பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கல்லூரியின் முதல்வர் எம்.ஆர். பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews