மின்வாரிய உதவி பொறியாளர் நியமன தேர்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 12, 2019

மின்வாரிய உதவி பொறியாளர் நியமன தேர்வு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மின்வாரிய உதவி பொறியாளர் நியமன தேர்வுக்கு எதிரான வழக்கில் 'நியமனம் என்பது இறுதித் தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.புதுக்கோட்டை திருவாப்பூர் சத்தியமூர்த்தி தாக்கல் செய்த மனு: தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர்கள் பணி நியமனத்திற்கு 2018 பிப்.14ல் அறிவிப்பு வெளியானது. தேர்வில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. இட ஒதுக்கீட்டு பிரிவைச் சேர்ந்த பலர் பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வானோர் பட்டியல் 2019 மே 29ல் வெளியானது. தேர்வு பட்டியலை ரத்து செய்து இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும். தற்போதைய தேர்வு பட்டியல் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு சத்தியமூர்த்தி மனு செய்தார்.நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார்.மனுதாரர் தரப்பில் 'இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததோடு பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கபட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டது.நீதிபதி 'பணி நியமனம் என்பது இவ்வழக்கின் இறுதி தீர்ப்பிற்கு கட்டுப்பட்டது. மின்வாரிய(டான்செட்கோ) தலைமைப் பொறியாளர் (பணியாளர் நலன்) பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews