புத்தகங்களே அச்சிடாத அவலம் அரசு பள்ளிகளில் அழிந்து போன சுற்றுச்சூழல் கல்வி: மலைகள், காடுகளின் நன்மையை அறிய முடியாத இளைய தலைமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 30, 2019

புத்தகங்களே அச்சிடாத அவலம் அரசு பள்ளிகளில் அழிந்து போன சுற்றுச்சூழல் கல்வி: மலைகள், காடுகளின் நன்மையை அறிய முடியாத இளைய தலைமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் கல்வி என்ற பாடமே இல்லாத நிலை ஏற்பட்டு இருப்பது கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மலைகள், காடுகள், மரங்கள், நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக இளைய தலைமுறையிடம் இயற்கை மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்காக கடந்த 2004ம் ஆண்டு தமிழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் சார்பில் இதற்கான புத்தகங்கள் அச்சிடப்பட்டன. முதற்கட்டமாக 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மேல்நிலை கல்வியில் சுற்றுச்சூழல் கல்வி இணைக்கப்பட்டது. இந்த கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 2 ெதாகுப்பாய்வுகளாக புத்தகங்கள் வந்துள்ளன. கடைசியாக 2008க்கு பிறகு இந்த கல்விக்கான புத்தகங்கள் அச்சிடப்பட வில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக புத்தகங்கள் அச்சிடப்படாமல், தற்போது சுற்றுச்சூழல் கல்வி என்பதே இல்லாமல் போய் விட்டன.
இதனால் இயற்கையின் பயன்பாட்டை இளைய தலைமுறை அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. சுற்றுச்சூழல் கல்வியை போதிப்பதன் மூலம் தற்போதைய இளைய தலைமுறையிடம் இயற்கையின் அவசியத்தை உணர்த்த முடியும். இதனால் எதிர்காலத்தில் நீர் நிலைகள் பாதுகாப்பு, மலைகள், வனங்கள் பாதுகாப்பு முக்கியமானதாக மாறும் என்பது கல்வியாளர்களின் கருத்தாகும். ஆனால் தமிழக அரசு சுற்றுச்சூழல் கல்வியில் ஆர்வம் காட்டாததால் இதற்கான புத்தகங்கள் இல்லாமல் ஆசிரியர்கள் திணறி வருகிறார்கள்.
இந்த பிரச்சினை குறித்து ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான டேவிட்சன் கூறுகையில், சுற்றுச்சூழல் கல்வியில் இயற்கை பாதுகாப்பு தொடர்பான பாடத்திட்டங்கள் உள்ளன. மழை நீர் சேகரிப்பு உட்பட நிலத்தடி நீரை புதுப்பித்தல், இயற்கை வனப்புடைய நிலப்பரப்பு வீணாவதை தடுப்பதற்கான நோக்கங்கள், நீர் பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மையின் அவசியம், காடுகளின் பாதுகாப்பு, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், வன உயிரினங்கள் பாதுகாப்பு என இயற்கை சார்ந்த அனைத்து விஷயங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த கல்விக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால் இதற்கான புத்தகத்தை கூட தமிழ்நாடு அரசு பாட நூல் கழகம் அச்சிட்டு வழங்குவது கிடையாது. இயற்கையை நம்பி தான் மனித இனம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. காடுகள் இருந்தால் மழை இருக்கும். மழை வந்தால் தான் சமவெளிகள் பயன்பெறும். காடுகள், மழைகள், சமவெளிகள் ஒன்றுக்கொன்று ெதாடர்பு உடையது. இவற்றை தான் சுற்றுச்சூழல் கல்வி மாணவர்களுக்கு விளக்குகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் சுற்றுச்சூழல் கல்வி என்பது மிகவும் அவசியமானதாகும். எனவே இந்த கல்வியாண்டில் இருந்தாவது முறையாக சுற்றுச்சூழல் கல்வியை மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கல்வியில் பல்வேறு புதிய யுக்திகளை தமிழக அரசு கையாண்டு வருவதாக கூறுகிறார். ஆனால் ஏற்கனவே நடைமுறையில் இருந்த சுற்றுச்சூழல் கல்வியை கூட முறையாக மாணவர்களுக்கு போதிக்க நடவடிக்கை எடுக்காதது கல்வியாளர்களை மிகுந்த வேதனை அடைய செய்துள்ளது. வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு, மரங்கள் அழிப்பு என இயற்கைக்கு எதிரான செயல்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தீமைகளை இளைய தலைமுறை உணர்ந்து எதிர்காலத்தில் இயற்கை பாதுகாக்கப்பட சுற்றுச்சூழல் கல்வி என்பது மிகவும் அவசியமாகும். எனவே தமிழக அரசு இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் வேண்டுகோள் ஆகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews