2144 முதுநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2019

2144 முதுநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் கிரேடு1 பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் 24ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் மேனிலைப் பள்ளிகளில் 2144 முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் கிரேடு 1 பணியிடங்களில் புதிய நபர்க்ள் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். அதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வ ாரியம் நேற்று வெளியிட்டது.மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் 24ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு கணினி மூலம் நடத்தப்பட உள்ளது. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், அரசியல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் நபர்கள் 1.7.2019ம் தேதியில் 57 வயதுக்கு மிகாதவராக இருக்க வேண்டும். மேலும் முதுநிலைப் பட்டம் மற்றும் பிஎட் பட்டத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம் ெபாதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான போட்டித் தேர்வு 150 மதிப்பெண்களுக்கு கணினி மூலம் நடத்தப்படும். அதில் 110 மதிப்பெண்கள் பிரதான பாடத்திலும், கல்வியியல் முறைகள் பிரிவில் 30 மதிப்பெண்களும், பொது அறிவில் 10 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெறும். மாற்றுத் திறனாளிகளுக்கும், பெண்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். தமிழ் வழியில் படித்தவர்கள் அதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். இட ஒதுக்கீடு, பணியிடங்கள், பாடங்கள், காலிப் பணியிடங்கள், மற்றும் கூடுதல் விவரங்கள் வேண்டுவோர் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews