👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
புதிய பாடத்திட்டம் தொடர்பாக முதுநிலை ஆசிரியர்களுக்கு ஜூன் 11-ம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.பள்ளிக் கல்வியில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த ஆண்டு 1, 6, 9,11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மீதமுள்ள 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. இந்தபுதிய பாடப்புத்தகங்கள் தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பாடத்திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு இரு வாரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘புதிய பாடத்திட்டம் தொடர்பாக அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில ஆசிரியர்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அதன்படி முதல்கட்டமாக 10, 12-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி ஜூன் 11-ம் தேதி தொடங்குகிறது. பாடத்திட்டம் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு சென்னை, ஈரோடு, அரியலூர், நாமக்கல், மதுரை ஆகிய மண்டலங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி 15 நாட்கள் நடைபெறும். தொடர்ந்து இதர வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒருவாரம் பயிற்சி வழங்கப்படும். மாணவர்களுக்கு எளிதாக பாடங்களை கற்றுதர இந்த பயிற்சி உதவியாக இருக்கும்’’ என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U