👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

இந்தியாவில் தற்போது புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது. இதன் முக்கிய சாரம்சமாக மும்மொழி பயிற்றுவித்தல் உள்ளது. முன்னதாக மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், மத்திய அரசு ஹிந்தியை கட்டாய பாடமாக கொண்டு வந்தது. இதற்கான வரைவும் (Draft) வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், ஹிந்தி கட்டாயமல்ல என்று மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும் ஏதாவது ஒரு வழியில் ஹிந்தியையும், இந்துவத்தையும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முயற்சிப்பதாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தமிழக பள்ளிகளில் 1ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் உயிரெழுத்து பட்டியலில் மதத்தை திணிக்கும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் அ என்றால் அம்மா, அணில், ஆ என்றால் ஆடு என்று குழந்தைகளுக்கு தமிழ் உயிர் எழுத்துக்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.
ஆனால், இப்போது புதிய பாடப்புத்தகத்தில் அ என்றால் அகஸ்தியர், ஆ என்றால் ஆஞ்சநேயர், இ என்றால் இமயம், ஈ என்றால் ஈசன் என்று பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை பள்ளி காவித்துறையாக மாறி விட்டதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இதனிடையே சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், பாடப்புத்தகங்களை தயாரித்த ஆசிரியர்களின் தவறுகளால் இவ்வாறு பிரசுரிக்கப்பட்டதாக விளக்கமளித்தார். மேலும், இது தொடர்பாக அந்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
View image on Twitter
புதிய 1ம், 2ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் உயிரெழுத்து கற்பித்தலில் மதத்தை புகுத்தியுள்ளதாக கல்வியாளர் கண்டனம் தெரிவித்தார். இதுவரை அ என்றால் அணில், ஆ என்றால் ஆடு என்றிருந்தது அ என்றால் அகத்தியர், ஆ என்றால் ஆஞ்சநேயர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U