மாணவிகளின் குறைகளை தீர்க்க பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 13, 2019

மாணவிகளின் குறைகளை தீர்க்க பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பெண்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘‘லேடீஸ் பர்ஸ்ட்’’ என்ற திட்டத்தில் நேற்று ஒரேநாளில் 7 அழைப்புகள் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவியர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் குறித்து புகார்களை தெரிவிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 355 பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் முதியோர்களுக்கு உதவிடும் வகையில் ஹலோ சீனியர்ஸ் திட்டம் கடந்த ஜனவரி 15ம் தேதி தொடங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெண்களுக்கு உதவும் நோக்கத்தில் லேடீஸ் பர்ஸ்ட் என்ற திட்டம் நேற்று முன்தினம் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டது. இதற்காக 9655220100 என்ற செல்போன் எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பெண்கள் தங்களுக்கான புகார்களை பதிவு செய்யலாம் என மாவட்ட எஸ்.பி.,சக்திகணேசன் இத்திட்டத்தை துவக்கி வைத்து தெரிவித்தார்.
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 7 அழைப்புகள் வந்துள்ளது. இதில் 4 அழைப்புகள் குடும்ப பிரச்னை, கடன் தொல்லை, வரதட்சணை தொடர்பாக வந்துள்ளது. 3 பேர் நன்றி சொல்வதற்காக அழைத்துள்ளனர். மேலும் புகார் தொடர்பான அழைப்புகள் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மாணவியர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க புகார் பெட்டி வைக்கப்படுகிறது. ஏற்கனவே கல்லூரிகளில் ‘சஜக்‌ஷன் பாக்ஸ்’ என்ற பெயரில் தான் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது மாணவிகளின் குறைகளை தீர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் புகார் பெட்டிகள் வைக்கப்படுள்ளது.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி.,சக்திகணேசன் கூறுகையில், முதியோர்களின் குறைகளை தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ஹலோ சீனியர்ஸ் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து பெண்களின் பிரச்னைகளை தீர்க்க லேடீஸ் பர்ஸ்ட் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம். இதில் பெண்கள் தங்களுக்கான பிரச்னைகளை தைரியமாக புகார் அளிக்கலாம். இதற்காக 3 கான்ஸ்டபிள், ஒரு தலைமை காவலர் நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூகவலை தளங்களில் ஆபாசமான மெசேஜ்கள், படங்கள் அனுப்பியது தொடர்பான புகார்களை தெரிவித்தால் அது ரகசியமாக வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரை சைபர் கிரைம் மூலமாக கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளை பொருத்தவரை சஜக்‌ஷன் பாக்ஸ் (ஆலோசனை பெட்டிகள்) என்று தான் வைத்துள்ளார்கள். புகார் பெட்டி என்று எதுவும் கிடையாது. நாங்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் 52 கல்லூரிகள், 103 அரசு பள்ளிகள், 200 தனியார் பள்ளிகள் என 355 பள்ளி, கல்லூரிகளில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியில் மாணவிகள் ஈவ்டீசிங், ஆபாச வார்த்தைகள் பேசுதல், செய்கைகள் செய்தல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில் புகார் எழுதி போடலாம். நாங்கள் அந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் புகார் பெட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews