கேட்ட உடனேயே சிபிஎஸ்இ அங்கீகாரம் தமிழக அரசு தாராளம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 13, 2019

கேட்ட உடனேயே சிபிஎஸ்இ அங்கீகாரம் தமிழக அரசு தாராளம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் சிபிஎஸ்இ, இன்டர்நேஷனல் பள்ளிகளில் படிப்பது கவுரவமாகி விட்டது. இந்த பள்ளிகளில் தான் தரமான கல்வி கிடைக்கிறது; முழுமையான ஆங்கில வழிக்கல்வி பயிற்று வைக்கப்படுகிறது என்பது தான். இந்த பள்ளிகளில் படித்தால் நீட், ஜேஇஇ உள்ளிட்ட அகில இந்திய நுழைவு தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சொல்லித் தருகின்றனர். அவர்கள் வெளிமாநிலங்களில் எங்கு போய் சேர்ந்தாலும் அங்கு சேர்ந்து படிக்க அதற்கு தக்க பாடத்திட்டம் சிபிஎஸ்இ பள்ளிகளின் பிளஸ் பாயின்ட்.
தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்து விட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் 5 முதல் 10 பள்ளிகளுக்கு தான் அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனால், அதிமுக அரசாங்கம் வந்த பிறகு கேட்பவர்களுக்கு எல்லாம் சிபிஎஸ்இ பள்ளி அங்கீகாரம் வழங்கப்பட்டது. சமச்சீர் கல்வி தரம் சரியில்லை என்று கூறி மெட்ரிக் பள்ளிகளும் தங்களை சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றிக்கொண்டனர். பெற்றோர்களும் சிபிஎஸ்இ பள்ளிகள் சிறந்தது என்று நினைக்கின்றனர். தற்போது தமிழக அரசு தமிழ் வழியா, ஆங்கில வழியா ஏதாவது ஒன்று தேர்வு செய்து படியுங்கள் என்று கூறி விட்டது. 1200 மதிப்பெண்கள் இருந்ததை பிளஸ் 1, பிளஸ்2வில் பாதிபாதியாக குறைத்து விட்டனர். இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்து விட்டு முதலாம் ஆண்டு சேரும் போது மிகவும் தடுமாறுகின்றனர். அவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெறுவதையே சவாலாக இருக்கிறது. இதனால், தான் சிபிஎஸ்இ படிப்பே சிறந்தது என்ற மனநிலைக்கு பெற்றோர்கள் வந்து விட்டனர்.
தனியார் சுயநிலை பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு கடந்த 2009ல் கோவிந்தராஜன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன்பிறகு ரவிராஜபாண்டியன், தொடர்ந்து சிங்காரவேலு, இப்போது மாசிலாமணியை போட்டுள்ளனர். இவர்கள் நிர்ணயித்த கட்டணம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயக்கூடாது. நாங்கள் மத்திய அரசின் கல்வி வாரியத்தின் கீழ் வருகிறோம் என்று நீதிமன்றத்தில் தடைஉத்தரவு வாங்கி விட்டனர். இப்போது சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் கட்டணம் நிர்ணயக்க வேண்டும் என்று உத்தரவு வந்துள்ளது. பெற்றோர்கள் மோகம் காரணமாக ஒரு சில பள்ளி நிர்வாகஙகள் தாங்களாகவே கட்டணம் நிர்ணயம் செய்து கொள்கின்றனர். ஆனால், இதை தமிழக கல்வி கட்டண நிர்ணயக்குழு கண்டு கொள்வதில்லை. பெற்றோர்கள் இடம் கிடைத்தால் போதும் என்று எண்ணுகின்றனர். எவ்வளவு பணம் கொடுக்கவும் தயாராக உள்ளனர். கல்வி கட்டணம் அதிகமாக இருந்தாலே அந்த பள்ளிக்கு ஒரு கிராக்கி வந்து விடுகிறது. அந்த பள்ளியில் படித்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று நாடு முழுவதும் 600 பள்ளிகள் வைத்துள்ளது. அந்த நிர்வாகம் இதை பிசினஸாகவே பார்க்கிறது.
அது போன்ற ஒரு சில பள்ளி நிர்வாகங்களை அரசு கண்டு கொள்வதில்லை. அந்த பள்ளிகளுக்கு சரியான விளையாட்டு மைதானம் கூட கிடையாது. ஆனால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பெரிய பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று போய் விழுந்து விடுகின்றனர். நல்ல பள்ளிகளாக இருக்கிறதா என்று பெற்றோர்கள் பார்க்க வேண்டும். நல்ல சிபிஎஸ்இ பள்ளிகள் இருந்தும் கூட அந்த பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்க்க தயங்குகின்றனர். இந்த நிலைமை மாற பெற்றோர்கள் எந்த பள்ளி சிறந்தது என்று விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்.தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று நாடு முழுவதும் 600 பள்ளிகள் வைத்துள்ளது. அந்த நிர்வாகம் இதை பிசினஸாகவே பார்க்கிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews