👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இலவசப் பயிற்சி வழங்க விரும்பும் நிறுவனங்கள் ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரி எஸ்.கே.சாகு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறையின்கீழ் செயல்படும் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் மூலம் எஸ்.சி, எஸ்.டி பிரிவைச் சேர்ந்த 60 பேருக்கு சுருக்கெழுத்து பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வழங்க பயிற்றுநர்கள், பயிற்சி கட்டமைப்பு, உரிய இடவசதியுடன் கூடிய பயிற்சி நிறுவனங்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கு விருப்பமுள்ள நிறுவனங்கள் எண்.56, சாந்தோம் நெடுஞ்சாலை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய வளாகம், சென்னை-4 என்னும் முகவரியில் உள்ள, எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மைய உதவி மண்டல வேலைவாய்ப்பு அதிகாரியிடம் ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனங்கள் பொது விழிப்புணர்வு, பொது ஆங்கிலம், எண் கணிதம், போட்டித் தேர்வு பயிற்சி, கணினி அடிப்படை அறிவாற்றல், சுருக்கெழுத்து, தட்டச்சு போன்ற பயிற்சிகள் வழங்க வேண்டும். இந்த நிறுவனங்களுக்கு தொழில் முறைக் கட்டணமாக விண்ணப்பதாரருக்கு ரூ.800 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 044 24615112 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U