மல்டிமீடியா படிப்பும் மற்றும் வேலைவாய்ப்பு எதிர்காலமும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 11, 2019

மல்டிமீடியா படிப்பும் மற்றும் வேலைவாய்ப்பு எதிர்காலமும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இந்தப் பகுதியில் டிசைன் & மீடியா கல்வித்துறையில் தொலைநோக்குப் பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க.குமார் மல்டிமீடியா படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கொடுக்கும் தகவல்களை இனி பார்ப்போம்… இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் அனைவரும் மல்டிமீடியாவில் மூழ்கிவிட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏனெனில், நம்மைச் சுற்றி அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்றம் பெற்றதிலிருந்தே அறிந்துகொள்ளலாம். உதாரணமாக, ஆன்லைன் செய்திகளை வாசிப்பது தொடங்கி, திரைப்படங்கள், டிவி, அனிமேஷன் போன்றவற்றை காண்பது, பொருட்களை விளம்பரப்படுத்துவது மற்றும் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்துவது வரை அனைத்திலும் டிஜிட்டல் கன்டென்ட்டின் பங்களிப்பு உள்ளது, இது மல்டிமீடியாவின் அங்கமாகும். மல்டிமீடியா தற்போது ஒவ்வொரு துறையிலும் ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது.
மல்டிமீடியா படிப்புகள் நிறைய சிறப்பம்சங்களும் வேலைவாய்ப்புகளும் கொண்ட மல்டிமீடியா பற்றிய படிப்புகள் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.கலை, கல்வி, பொழுதுபோக்கு, இதழியல் (ஜர்னலிசம்), பொறியியல், மருத்துவம், உற்பத்தித்தொழில்கள், ஆய்வு நிறுவனங்கள் போன்ற பல்வேறு வெற்றிகரமான துறைகளின் பின்னாலும் மல்டிமீடியா இருந்துவருகிறது. மல்டிமீடியா இந்த உலகத்தினை இணைத்து, எந்தவொரு செய்தியையும் அல்லது விஷயத்தையும் எல்லைகள் கடந்து நொடிப்பொழுதில் பயணித்து அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்கிறது. சாதாரண டெஸ்க்டாப் கம்ப்யூட்டரிலிருந்து, விர்ச்சுவல் ரியாலிட்டி (மெய்நிகர் உண்மை) வரை மல்டிமீடியா பயன்பாடுகள் மனிதனுக்கும் டிஜிட்டல் உலகத்திற்கும் இடைப்பட்ட தொடர்பினை எண்ணற்ற வழிகளில் உருவாக்கியுள்ளது.சந்தைப்படுத்துதல், கல்வி, பயிற்சி மற்றும் பல துறைகளின் பார்வையாளர்களின் கவனத்தை பல்வேறு வழிகளில் ஈர்க்கும் வழிகளை மல்டிமீடியா உருவாக்கி நமக்கு உதவி வருகிறது. மேலும் தொடர்புகொள்வது, விற்பது, ஈர்ப்பது, கற்பிப்பது, மகிழ்விப்பது, புதுமையினை புகுத்துவது, கற்பனையைக் காட்சிப்படுத்துவது, நினைவுகளைப் பதிவிடுவது, கலாசாரத்தினை சித்தரிப்பது மற்றும் தாக்கத்தை உருவாக்குவது, ஒரு பிராண்டை (வியாபார குறியீட்டை) நிறுவுவது, வியாபாரத்தை மேம்படுத்துவது மற்றும் கடினமான செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவது போன்ற திறன்களில் மல்டிமீடியா தொழில் வல்லுநர்கள் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.
எதிர்காலம் மல்டிமீடியா தொழில் வல்லுநர்களுக்கான வருவாய் அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளைப் பொறுத்து மிகவும் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் சராசரி ஆண்டு வருமானம் 2 முதல் 4 லட்சம் வரை உள்ள நிலையில், அதே துறையில் படிப்படியாக பணி உயர்வு பெறும்போது அவர்களின் வருமானத்திற்கு எல்லையே இல்லை. இவையனைத்தும் ஒரு தனி மனிதனின் திறமையினைச் சார்ந்தே உள்ளது. இந்தியாவின் பொழுதுபோக்கு மற்றும் விளம்பரத் தொழில்துறைகள் வளர்ந்து, பன்மடங்காகி மேலும் மேற்கத்திய நாடுகளின் தொழில்துறைகளோடு போட்டியிடும் அளவில் உயர்ந்து உலகளாவிய மாதிரி வடிவமாகியுள்ளது.இந்தியாவின் மீடியா & பொழுதுபோக்கு துறைகளின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 14.3% எனும் அளவில் ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியடைந்து வரும் 2020ஆம் ஆண்டில் 2 லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் (33.7 பில்லியன் அமெரிக்க டாலர்களை) எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் மற்றும் வீடியோ கேம்கள் வளர்ச்சியடைந்து உலகளவில் முதன்மையான கலை வடிவங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு, புதுமையான மீடியா சாத்தியக்கூறுகளான ஆகுமென்டட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டீஸ் (AR&VR) போன்றவை எல்லாம் முயற்சிக்கப்படுகின்றன.மல்டிமீடியா துறைகளின் மதிப்பினை உயர்த்திடும் இந்திய அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சிகள்
*இந்திய அரசாங்கம் மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சிக்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது, அவற்றில் ஒன்று, கேபிள் டிவி இணைப்புகளை டிஜிட்டல் தரத்திற்கு உயர்த்தியது. *இந்திய மற்றும் கனடா அரசாங்கங்கள் இணைந்து ஒளி-ஒலி இணை தயாரிப்பிற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளிலும் உள்ள தயாரிப்பாளர்கள் அவர்களது தொழில்நுட்ப, படைப்புருவாக்க, கலை, நிதி மற்றும் சந்தைப்படுத்துதல் வளங்களை ஆய்வு செய்து தங்களது இணை தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் மேலும் தங்களது கலை மற்றும் கலாசாரங்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. *இதனைத் தொடர்ந்து, கொரிய நாட்டுடனும் ஒரு ஒளி-ஒலி இணை தயாரிப்பிற்கான ஒப்பந்தம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான யூனியன் கேபினட்டால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. *மேலும் அரசாங்கம் மீடியாவிற்கென ஒரு சிறந்த தேசிய மையத்தினை உருவாக்க எண்ணியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்மற்றும் பிராந்திய படங்கள் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்கேற்க நிதியுதவி அளிப்பதற்காக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள் இதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும் பட்சத்தில், கிராபிக் டிசைனர், கான்செப்ட் டிசைனர், ஆன்லைன் கன்டென்ட் மேனேஜர், வெப் டிசைனர், வி.எஃப்.எக்ஸ். டிசைனர், கலரிஸ்ட், கான்செப்ட் ஆர்ட்டிஸ்ட், அனிமேட்டர், வீடியோ/ஆடியோ எடிட்டர், ஆர்ட் டைரக்டர், கேம் டெஸ்டர், விஷ்வலைஸர், ப்ரொஃபஷனல் போட்டோகிராபர், ப்ரசன்டேஷன் டிசைனர் மற்றும் யு.ஐ. டிசைனர் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. மேலும் TCS, அமேசான், CTS, McKinsey & Company, Tech Mahindra, Wipro, HCL, பிளிப்கார்ட், ZOHO, R R Donnelley, Ogilvy போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், SUN Network, ITC, 2adpro, 9x, emantras, SPi Global போன்ற இந்திய நிறுவனங்களிலும் பணியாற்றும் வாய்ப்புள்ளது. மல்டிமீடியா படிப்பை தேர்ந்தெடுக்கலாமா?
*மிகவும் ஆக்கப்பூர்வமானது *பிரபலமாக விரும்புவோர் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கலாம் *ஏராளமான வேலை வாய்ப்புகள் *எப்போதும் தேவை உள்ள ஒரு துறை *பகுதி நேரமாக (ஃபிரீலான்ஸ்) பணி செய்ய அதிக வாய்ப்பு *கட்டுப்பாடற்ற தொழில்துறை *சலிப்பு ஏற்படாத புதுமைகள் நிறைந்த துறை *நடைமுறை வாழ்க்கையோடு இணைந்து மிகுந்த பயனளிக்கும் துறை மேற்கூறிய காரணங்களைப் போல் பல பயன்களை உள்ளடக்கிய மல்டிமீடியா படிப்பை தேர்ந்தெடுப்பது தவறில்லை.பல்வேறு துறைகளிலும் படைப்புப் பணியாற்ற மற்றும் அதற்கேற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள நினைக்கும் ஆர்வலர்களுக்கு இத்துறைப் படிப்பு ஒரு வரப்பிரசாதமே! கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகள் 1.B.Sc., Media Technology (Eligibility:+2) 2.PG Diploma in Multimedia Technologies (Eligibility: Any Graduation) 3.M.Sc., Multimedia (Eligibility: Any Graduation)
மேலும் விவரம் வேண்டுவோர் www.icat.ac.in இணையதளம் மூலமாகவும், 95001 28555 என்ற எண்ணை தொடர்புகொண்டும் தகவல்களைப் பெறலாம்.அடுத்த அத்தியாயத்தில் Fashion Design படிப்பு பற்றி விரிவாக பார்க்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews