நெய்வேலியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: 8 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு last date for apply MAY 18 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 11, 2019

நெய்வேலியில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்: 8 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு last date for apply MAY 18

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
படிப்புக்கு ஏற்ற வேலை தேடும் பட்டதாரிகளையும், கிடைத்த வேலைக்கு போகும் பட்டதாரிகளையும் நாம் நிறைய பேரை பார்த்திருப்போம். ஆனால், 10ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், முதுநிலைப் பட்டம் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ராணுவத்தில் சேர ஓர் அரிய வாய்ப்பு.
பாதுகாப்புத் துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளபடி கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பாரதி விளையாட்டு அரங்கில் இந்திய ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் வருகிற ஜூன் மாதம் 7-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த முகாமில் சென்னை, கடலூர், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன், புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்ளலாம். இதில் தொழில்நுட்பம், விமான தொழில்நுட்பம், வெடிகுண்டு பரிசோதகர், நர்சிங் உதவியாளர், பொதுப்பணி, எழுத்தர், ஸ்டோர் கீப்பர் டெக்னீசியன், டிரேட்ஸ்மென் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8,10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. சில பணிகளுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதள பதிவு மே 18-ம் தேதி வரை பதிவு செய்யலாம். விண்ணப்பதாரர்கள் மே மாதம் 21-ம் தேதி மேற்கண்ட இணையதளத்திலிருந்து தங்களுடைய அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதேபோன்று ஆட்சேர்ப்பு முகாமிற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்கள் அனுமதி சீட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும். ஆள்சேர்ப்பு செயல்முறை முழுமையாக தானியங்கி மற்றும் வெளிப்படையானது. கடின உழைப்பு, தயாரிப்பு மட்டுமே தகுதியாக தேர்வு செய்வதை உறுதி செய்கிறது. போலி முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்பதையும் அந்தச் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews