பிளஸ் 2 வகுப்புக்கான தமிழ்வழி பாடபுத்தகங்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 17, 2019

பிளஸ் 2 வகுப்புக்கான தமிழ்வழி பாடபுத்தகங்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிளஸ் 2 வகுப்பில் தமிழ்வழி பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அச்சிடும் பணிகள் முடிந்து ஒருவாரத்தில் விற்பனை தொடங்கும் என பாடநூல்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிக்கல்வியில் பழைய பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து எஞ்சிய வகுப்புகளுக்கான புதியபாடத்திட்டம் தயாரிக்கும் பணிகள்கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தன. இதையடுத்து பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் மட்டும் முதல்கட்டமாக இப்போது விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி 3, 4, 5 தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. ஆனால், பிளஸ் 2 வகுப்பில் தமிழ்வழிப் பாடப்புத்தகங்கள் கிடைக்கவில்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:புதிய பாடப்புத்தகங்கள் விற்பனை, சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஆங்காங்கே புத்தக விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்விவரங்களை பாடநூல் கழக அலுவலக தொலைபேசி எண்ணில் (044 - 2823 8335) பேசி அறியலாம். இதுதவிர மாணவர்கள் www.textbooksonline.tn.nic.in என்ற இணையதளம் மூலமும் பதிவுசெய்து புத்தகங்களைப் பெறலாம். பதிவு செய்த 3 நாட்களுக்குள் பாடநூல்கள் அனுப்பி வைக்கப்படும். மேலும், மேற்கண்ட இணையதளத்தில் இ-புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிய புத்தகங்களுக்கு பக்கங்களின் எண்ணிக்கை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
புத்தக விற்பனையில் பிளஸ் 2 வகுப்பில் தமிழ் பாடம் தவிர இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட இதர முக்கிய பாடங்களுக்கு தமிழ் வழியில் புத்தகங்கள் அச்சிடும் பணிகள் முடியவில்லை. இதேபோல், 10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகமும் தமிழில் இன்னும் தயாராகவில்லை. இதனால் அந்தப் புத்தகங்கள், மையங்களில் விற்பனை செய்யப்படவில்லை. அனைத்து வகுப்புகளுக்கான தமிழ்வழி பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி ஒரு வாரத்தில் முடிவடைந்துவிடும். அதன்பின் தடையின்றி அனைத்து புத்தகங்களும் கிடைக்கும். விடுபட்ட வகுப்புகளுக்கான புத்தக விற்பனையும் அடுத்த வாரத்தில் தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews